மேலும் அறிய
7 AM Headlines: உங்களை சுற்றி இதுவரை நடந்தது என்ன?.. முக்கிய நிகழ்வுகள் காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு - 'நடிப்பு சுதேசிகள்தான் இந்த கோட்சே கூட்டம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
- சிறை பிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகள் விடுவிக்கப்படும் என அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு - ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் போராட்டம் வாபஸ்
- சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கான அதிகாரப்பூர்வ கட்டண விவரம் அறிவிப்பு - தாறுமாறு விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி
- குலசேகரப்பட்டினத்தில் கோலாகலமாக நடைபெற்ற தசரா திருவிழா - நள்ளிரவில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
- விஜயதசமியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் விமரிசையாக நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி - நெல்லில் "அ" எழுத வைத்து குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கி வைத்த பெற்றோர்கள்
- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் விமர்சனம்
- ஆரிய - திராவிடம் பற்றி உளறி வரலாற்றை அழிக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்
- செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற ரயில் விபத்தில் மூன்று மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உயிரிழப்பு
- வங்கக்கடலில் அதிதீவிர புயலாக மாறியது ‘ஹாமூன்’ - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
- ஆவடி அருகே தடம் புரண்ட மின்சார ரயில் பெட்டிகள் - ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என தகவல், பல ரயில்கள் தாமதம்
- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
இந்தியா
- பிரதமர் மோடியுடன் மேடையை பகிர்ந்து கொள்ள மாட்டேன் என மிசோரம் முதலமைச்சர் சோரம்தங்கா அறிவிப்பு
- ஒடிசாவில் நடந்த துர்கா பூஜையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு - 26 பேர் கைது
- 2030 ஆம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 2வது இடம் பிடிக்கும் என s and p global market intelligence கணிப்பு
- ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோயில் கட்டப்படும் என மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வாக்குறுதி
- போதையில் காவல் நிலையத்தில் ரகளை - ஜெயிலர் பட வில்லன் விநாயகன் கைது
- ராவண வதம் நிகழ்வுடன் நிறைவடைந்த தசரா திருவிழா - சாதி வெறியை வேறுடன் அறுக்க வேண்டும் என நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
- சிறையில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தொண்டர்களுக்கு கடிதம்
உலகம்
- அமெரிக்காவில் பனிப்பொழிவால் 168 வாகனங்கள் அடுத்தடுத்து விபத்து - 8 பேர் பலி
- மெக்ஸிகோவில் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில் பெண் அதிகாரி உட்பட 13 ராணுவ வீரர்கள் பலி
- நேபாளத்தில் புனித யாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்து - 13 இந்திய பக்தர்கள் காயம்
- காஸாவில் இஸ்ரேல் எடுக்கும் நடவடிக்கைகள் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என முன்னாள் அமெரிக்க அதிபர் ஓபாமா எச்சரிக்கை
- இந்தியா உட்பட 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு கட்டணமில்லா விசா வழங்குவதாக இலங்கை அரசு அறிவிப்பு
விளையாட்டு
- பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
- உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 233 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா
- உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் மோதல்
- ஆப்கானிஸ்தான் அணியுடன் படுதோல்வி எதிரொலி - பாடம் கற்றுக் கொள்வதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
விவசாயம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion