மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
7 AM Headlines: நோன்பு கஞ்சி தயாரிக்க மசூதிகளுக்கு பச்சரிசி.. எம்,பி., பதவியில் இருந்து விலகிய நட்டா.. இன்றைய ஹெட்லைன்ஸ்..!
7 AM Headlines: இன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இங்கு காணலாம்.
தமிழ்நாடு:
- திட்டங்களின் பலன்கள் மக்களுக்கு சேர்ந்திருக்கிறதா என அறிய நீங்கள் நலமா..? என்ற புதிய திட்டம்: சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்காக 3ம் பாலினத்தவர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரத்தை சேகரிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவும்
- கலைஞர் நினைவிட அருங்காட்சியகத்தை நாளை முதல் மக்கள் பார்வையிட அனுமதி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
- செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யவில்லை - அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு
- சென்னையில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டிய காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் வீட்டு சிறையில் அடைப்பு
- போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 470 குற்றவாளிகள் கைது - காவல்துறை அறிவிப்பு
- இந்தியாவின் வளர்ச்சியில் சென்னை மக்களின் பங்கு அதிகம்: பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
- மார்ச் 8-ல் ஈஷா மஹா சிவராத்திரி விழா கொண்டாட்டம்- குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு
- 4 தலைமுறைகளாக மாறி மாறி ஆட்சி செய்யும் எல்லா குடும்பத்தையும் அரசியலில் இருந்து அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது - அண்ணாமலை
- ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க மசூதிகளுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா:
- பாஜக தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகல்
- ஆந்திராவில் தோழி வீட்டில் ஒன்றே முக்கால் கிலோ தங்கம் திருடிய இளம் நடிகை கைது
- இமாச்சல் பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவு பொழிந்து வருவதால் 600க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டன
- ஆதித்யா-எல்1 விண்கலம் ஏவப்பட்ட அதே நாளில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
- ஹிமாச்சலில் 18 முதல் உள்ள மகளிருக்கு மாதம் ரூ. 1, 500 வழங்கப்படும் என முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்துள்ளார்.
- கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அதிவேக ஈனுலையின் செயல்பாட்டை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார்.
- உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆம் ஆத்மி அலுவலகத்துக்கு உரிய இடத்தை மத்திய அரசு வழங்குமாறு அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
- மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக மார்ச் 7ம் தேதி காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூடுகிறது.
உலகம்:
- காசா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 90 பேர் உயிரிழப்பு.
- நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் 48 மணி நேரத்தில் போர் நிறுத்தம் சாத்தியம் - ஹமாஸ் அறிவிப்பு
- எரிசக்தி உற்பத்தி தொடர்பாக இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்து.
- சமூக ஊடகங்களை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் செனட் சபையில் தீர்மானம் தாக்கல்.
- பாகிஸ்தானில் ஏற்பட்ட கனமழையால் கடந்த 48 மணிநேரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்
விளையாட்டு:
- இந்திய பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- உலகத் தரவரிசை அடிப்படையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று சரித்திரம் படைத்துள்ளது.
- ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வி அடைந்து வெளியேறியது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion