மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: இந்தியா கூட்டணி இன்று பேரணி.. வெளியான இறுதி வேட்பாளர்கள் பட்டியல்.. இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் மொத்தமாக 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
- முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- மக்களவை தேர்தலில் விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
- மோடியை 29 பைசா என்று தான் அழைக்க வேண்டும் - அமைச்சர் உதயநிதி
- தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.
- ராமநாதபுரம் மாவட்டத்தை பொருளாதாரத்தில் சிறந்த மாவட்டமாக மாற்ற, மத்திய அரசின் உதவிகளோடு நடவடிக்கை எடுக்கப்படும் - ஓ.பன்னீர் செல்வம்
- பிரதமர் மோடியின் கண்களில் வரும் கண்ணீரை, அவரது கண்களே நம்பாது என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார் மாநில நிர்வாகி தடா பெரியசாமி; தமிழகத்தில் கட்சியை குழிதோண்டி புதைத்து வருகிறார் அண்ணாமலை என குற்றச்சாட்டு
- வாக்காளர்களுக்கு ரூ.2000 லஞ்சம் கொடுத்ததாக ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு
- மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
- தமிழ் திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜியின் உடன் தகனம்; அவரது கண்கள் தானம்
- தங்கம் விலையில் திடீர் மாற்றம்; சவரனுக்கு ரூ.160 ஆக குறைந்தது
இந்தியா:
- தேர்தல் பத்திரம் ரத்தாவதற்கு 3 நாள் முன்பு ரூ.10 ஆயிரம் கோடிக்கு பத்திரம் அச்சடிக்க மத்திய அரசு அனுமதி - ஆர்டிஐ மனுவில் தகவல்
- ரூ.1823 கோடி வருமான வரி அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்
- கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி மெகா பேரணி
- டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
- கெஜ்ரிவால் விவகாரத்தில் உலக நாடுகள் கருத்து: சட்டத்தின் ஆட்சி குறித்து யாரும் தங்களுக்கு பாடம் கற்று தரத் தேவையில்லை என குடியரசு துணை தலைவர் தெரிவித்துள்ளார்.
- தொலைபேசி எண்ணிற்கு ஏதேனும் மிரட்டல் வந்தால், எந்த தகவலையும் பகிர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி தோன்றும் சூரிய கிரகணம் இந்தியாவில் காண இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம்:
- நேபாளத்தில் டாக்ஸி ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு.
- பாலியல் தொழிலில் ஈடுபட்டால் பொது இடத்தில் கல் எறிந்து கொல்லப்படுவார்கள் - தலிபான்கள் எச்சரிக்கை.
- பலுசிஸ்தானில் கனமழையால் மேற்கூரை இடிந்து விபத்து - 5 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழப்பு.
- மடகாஸ்கரில் கனமழை; வெள்ளப்பெருக்கில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு.
- ஜப்பானில் தடை செய்யப்பட்ட மருந்துகளை சாப்பிட்ட 5 பேர் உயிரிழப்பு
விளையாட்டு:
- ஐபிஎல் 2024: ஹாட்ரிக் வெற்றியை பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - டெல்லியுடன் இன்று மோதல்.
- ஐபிஎல் தொடரில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ வீரர் மயங்க் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
- ஐபிஎல் 2024: இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி.
- ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion