மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உள்ளூர் முதல் உலக நிகழ்களின் தொகுப்பாக - காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 ஃபாரன்ஹீட்டை தாண்டியது வெயில் - அதிகபட்சமாக ஈரோட்டில் 108 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதால் பொதுமக்கள் அவதி
- மக்களவை தேர்தல் முடிந்தபிறகு தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும் - அமைச்சர் பெரியகருப்பண்
- தமிழ்நாட்டிற்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
- தேர்தல் நேரத்தில் தாம்பரம் ரயிலில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்
- உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயம் - நாகர்கோவிலிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற பேருந்து ஆசனூர் பகுதியில் கவிழ்ந்தது
- அரசு மருத்துவமனையில் பணியாற்ற மறுக்கும் மருத்துவர்களின் அணுகுமுறை பாராட்டத்தக்கது அல்ல - சென்னை உயர்நீதிமன்றம்
- கோடை சீசன்: ஊட்டி- மேட்டுப்பாளையம் இன்று முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றம்
- குடும்பத்தகராறில் மாமனார், மாமியார் உட்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு - திண்டுக்கல்லில் மருமகள் குடும்பத்தினர் வெறிச்செயல்
இந்தியா:
- நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இரண்டாம் கட்டமாக 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு - சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவு
- மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கொளுத்தும் வெயில். நாட்டிலேயே அதிகபட்சமாக ஆந்திராவின் நந்தியால் பகுதியில் 112 பாரன்ஹீட் வெப்பம் பதிவு!
- ஒப்புகைச் சீட்டுகளை 100% எண்ணக்கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி. மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டுவர உத்தரவிட முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
- பாஜகவை சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் செய்த ராகுல் காந்தி 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற பேச்சை மோடி தற்போது நிறுத்தி விட்டதாகவும் சாடல்!
- பிரதமர் மோடி முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்தார், விசாயிகளின் கடனை அல்ல - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
- பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது - ஜே.பி. நட்டா
- தேர்தலில் மோடி அலை எதுவுமில்லை, விஷம் தான் பரவியுள்ளது - காங்கிரஸ் சாடல்
- சல்மான் கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம் - பிரபல ரவுடியின் சகோதரருக்கு லுக்-அவுட் நோட்டீஸ்
உலகம்:
- அமெரிக்காவில் போலீசாரின் கைது நடவடிக்கையின் போது கருப்பின நபர் மூச்சு திணறி பலி - இணையத்தில் வைரலாகும் வீடியோ
- உக்ரைனுக்கு ஏவுகணை தடுப்பு உட்பட, 6 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத உதவி வழங்கப்படும் - அமெரிக்கா
- ஆப்ரிக்கா நாட்டில் கிளர்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறி 223 பேரை சுட்டுக் கொன்ற ராணுவம்
- கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிலங்கலங்கள் - ஆஸ்திரேலியாவில் பரபரப்பு
விளையாட்டு:
- கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை சேஸ் செய்து பஞ்சாப் வெற்றி- டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை
- ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள்: முதல் போட்டியில் மும்பை - டெல்லி அணிகளும், இரண்டாவது போட்டியில் லக்னோ - ராஜஸ்தான் அணிகளும் மோதல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion