மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ரஜினியின் புது பட டைட்டில் வெளியீடு.. இன்றைய ஹெட்லைன்ஸ்..!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- மதுரை: பச்சை பட்டுடுத்தி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ தங்க குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்கினார்.
- மக்களின் கோபத்தை அஞ்சி பிரதமர் மோடி மதவெறியை தூண்டுகிறார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- மக்களின் சொத்துகளை பறித்து முஸ்லிம்களிடம் தருவோம் என காங்கிரஸ் எப்போது பேசியது என ப.சிதம்பரம் கேள்வி.
- சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் 171வது படத்திற்கு கூலி என பெயரிடப்பட்டுள்ளது.
- வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - நடிகர் பிரகாஷ் ராஜ்.
- தமிழ்நாடு உள்பட 6 மாநிலஙகளில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னை வானிலை மையம்.
- பாஜக தலைவர்கள் பொறுப்பேற்று, தரம் தாழ்ந்து பேசுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்.
- கேண்டிடேட் செஸ் தொடரை வென்ற குகேஷூக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
- கோடை விடுமுறையில் பள்ளிகளின் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
- நரேந்திரமோடி போன்று எந்த பிரதமரும் விஷமத்தனமாக பேசியது இல்லை - ப.சிதம்பரம்.
- திருவண்ணாமலை: தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கிரிவலப்பாதைக்கு இலவச பேருந்து வசதி
- திருச்சி: முதியவர் மற்றும் போலீஸ் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 4 பேர் கைது
- 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு
இந்தியா:
- மக்களின் சொத்துகளை பறித்து முஸ்லிம்களிடம் காங்கிரஸ் கொடுத்துவிடும் என மோடி சர்ச்சை பேச்சு.
- சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு - ராகுல் காந்தி கண்டனம்.
- குஜராத்: சூரத் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் தவிர அனைவரது வேட்புமனுக்களும் வாபஸ்.
- பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு.
- மோடியின் நச்சு பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தாமாக வழக்கு பதிய வேண்டும் - யெச்சூரி.
- பாஜக கூட்டணியிலிருந்த ஒரே முஸ்லிம் எம்.பி. சவுத்ரி மெஹபூப் அலி ஆர்.ஜே.டியில் சேர்ந்தார்.
- கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பாவை பாஜகவில் இருந்து நீக்கம் என அறிவிப்பு.
- ஆந்திர சட்டப்பேரவை தேர்தல்; 38 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்.
உலகம்:
- இலங்கையின் ஊவா மாகாணத்தில் கார் பந்தயத்தின்போது கூட்டத்தில் கார் புகுந்து விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்வு.
- துபாயில் பெருமழையால் ஒருவாரம் வீட்டில் முடங்கிய மக்கள் மீண்டும் தங்களது அன்றாட நிலைமைக்கு திரும்பினர்.
- அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் கார் விபத்தில் இந்திய மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு.
- 5 நாள் மருத்துவ காரணங்களுக்காக தனிப்பட்ட பயணமாக இன்று சீனா செல்கிறார் நவாஸ் ஷெரீப்.
- சிரியாவில் அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈராக் ராணுவம் ராக்கெட் வீசி தாக்குதல்.
- இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் திடீர் ராஜினாமா.
- மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் சீன ஆதரவு பெற்ற அதிபர் முகமது முய்சு கட்சி வெற்றி
விளையாட்டு:
- ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
- ஐபிஎல் 2024: இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
- கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டத்தை தமிழகத்தைச் சேர்ந்த, 17வயது வீரரான குகேஷ் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார்.
- ஐபிஎல் போட்டியில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகல் என அறிவிப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion