மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உள்ளூர் மட்டுமல்ல.. உலகம் வரையிலான நிகழ்வுகள்.. காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ..!
கடந்த 24 மணிநேரத்தில் நடந்த நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்
தமிழ்நாடு
- சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
- ஆட்சி அதிகாரம் இருப்பதால் பெரியாருக்கு எதிராக பேசலாமா? - பாஜக தலைவர் அண்ணாமலை மீது காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம்
- திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ரயில் நிலைய தண்டவாளத்தை கடக்க முயன்ற தந்தை, 2 மகள்கள் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
- இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 தமிழக மீனவர்கள் விடுதலை - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நாட்டுப்படகு மீனவர்கள் நன்றி
- பரபரப்பான சூழலுக்கு இடையே டெல்லி சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி - உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்
- சபரிமலை சீசன் எதிரொலி - ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக சென்னை - கோட்டயம் இடையே 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்
- விசைப்படகுகளுக்கு வழங்கப்படும் டீசல் அளவை உயர்த்தி வழங்க அரசாணை வெளியீடு
- மண் சரிவு காரணமாக நவம்பர் 9 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
- நடிகை த்ரிஷா குறித்து ஆபாச பேச்சு சர்ச்சைக்கு நடிகர் மன்சூர் அலிகான் தன்னிலை விளக்கம் - தவறான வீடியோவை பரப்புவதாக குற்றச்சாட்டு
- சென்னை, புதுச்சேரி கடற்கரையில் ஒளிபரப்பப்பட்ட உலகக்கோப்பை இறுதிப்போட்டி - ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளிப்பு
இந்தியா
- நரேந்திர மோடி பிரதமரான பிறகு சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
- அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
- உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தோல்வி - இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் ஆறுதல்
- அதானிக்காக பிரதமர் மோடி 24 மணி நேரமும் உழைப்பதாக ராகுல்காந்தி கடும் குற்றச்சாட்டு
- பாலஸ்தீன மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியா - 2வது தொகுதி நிவாரணப் பொருட்களை அனுப்பியது
- திருப்பதி ஏழுமலையான கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு
- டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டதால் கனரக வாகனங்கள் மாநிலத்திற்குள் நுழைய அனுமதி
- பிரதமர் மோடியின் பேரணி பாதுகாப்பு செல்லும் வழியில் கார் விபத்து - 6 போலீசார் உயிரிழப்பு
- குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம்
- ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஹலால் தரச்சான்று விவகாரத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக உத்தரப்பிரதேச அரசு அறிவிப்பு
- காற்று மாசுபாடு குறைந்ததால் தலைநகர் டெல்லியில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு
உலகம்
- காஸா மருத்துவமனையில் உள்ள சுரங்கப்பாதையை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு
- இந்தியாவுக்கு புறப்பட்ட சரக்கு கப்பலை தெற்கு செங்கடல் பகுதியில் வைத்து கடத்திய ஹவுதி ஆதரவாளர்கள்
- 2023 ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக நிகரகுவா நாட்டைச் சேர்ந்த ஷென்னிஸ் பலாசியஸ் தேர்வு
- அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் மனைவி ரோஸ்லின் கார்டர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
விளையாட்டு
- உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா - 6வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தல்
- உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் போது மைதானத்திற்குள் புகுந்து இடையூறு செய்த பாலஸ்தீன ஆதரவாளர் மீது வழக்குப்பதிவு
- 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின் தொடர் நாயகன் விருதினை வென்றார் விராட் கோலி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
சென்னை
கல்வி
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion