மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உள்ளூர் நிகழ்வு முதல் உலக நடப்பு வரை .. காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தீபாவளியின் போது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழ்நாடு முழுவதும் 2,208 பேர் மீது வழக்குப்பதிவு
- புதிய சாதனைப் படைத்த தீபாவளி பண்டிகை மது விற்பனை - நவம்பர் 11, 12 ஆகிய 2 தினங்களில் ரூ.467 கோடிக்கு விற்பனையானதாக தகவல்
- முடிந்தது தீபாவளி விடுமுறை- வெளியூர் சென்றவர்கள் சென்னைக்கு மீண்டும் திரும்புவதால் வழியெங்கும் கடும் போக்குவரத்து நெரிசல்
- தொடர் மழை எதிரொலியாக கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
- தீபாவளி விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் 18 ஆம் தேதியை பணிநாளாக அறிவித்த தமிழ்நாடு அரசு - அன்றைய தினம் நடக்கவிருந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் 25, 26 ஆம் தேதிக்கு மாற்றம்
- உச்சவரம்பு நிர்ணயித்து மதுவிற்பனை செய்து அப்பாவி மக்களின் உயிரை திமுக அரசு பலிகொடுத்து கொண்டிருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்
- சென்னை - நெல்லை இடையே வரும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 28 ஆம் தேதி வரை வியாழக்கிழமையில் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு
- கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
- பட்டாசு விபத்தில் சிக்கி உயிரிழந்த ராணிபேட்டை சிறுமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடித்ததால் சென்னையில் வழக்கத்தை விட அதிகளவு காற்று மாசுபாடு - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
- தொடர் மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
இந்தியா:
- தெலங்கானாவில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து - 9 பேர் உயிரிழப்பு
- டெல்லியின் காற்று மாசுபாடு அதிகரிப்பு - தனியார் வாகனங்களின் பார்க்கிங் கட்டணம் இரண்டு மடங்கு உயர்வு
- இந்திய இறையாண்மையை பின்பற்றவில்லை என கூறி மணிப்பூரில் 9 அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை
- தீபாவளி பண்டிகைக்கு பின் காற்று மாசுபாடு - உலகளவில் டாப் 10 இடங்களில் டெல்லி, கொல்கத்தா, மகாராஷ்ட்ரா மாநிலங்களுக்கு இடம்
- சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு விடை கொடுக்க மக்கள் தயாராக இருப்பதாக பிரதமர் மோடி பரப்புரை
- உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க இன்னும் 2 நாட்களாகும் என அதிகாரிகள் தகவல்
உலகம்:
- காஸாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் அமைப்பு இழந்ததாக இஸ்ரேல் அமைச்சர் கேலண்ட் வெளியிட்ட வீடியோவில் தகவல்
- இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சராக டேவிட் கேமரூன் நியமனம் - உள்துறை அமைச்சராக இருந்த சுவெல்லா பிரவர்மேன் பதவி நீக்கம்
- இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு விராட் கோலி கையெழுத்திடப்பட்ட பேட்டை பரிசளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர்
- லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 17 பேர் படுகாயம்
விளையாட்டு:
- உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதல் - போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ள சந்தையில் ரூ.27 ஆயிரம் முதல் ரூ.2.5 லட்சம் வரை விற்பனை
- இந்தியாவை வீழ்த்தி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு செல்வதே எங்கள் இலக்கு - நியூசிலாந்து அணி வீரர் டெவன் கான்வே உறுதி
- பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டிக்கு இந்திய வீரர் தீரஜ் பொம்மதேவரா தகுதி
- ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இடம் பெற்ற இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் - இலங்கையின் அரவிந்த் டி சில்வா, இந்திய வீராங்கனை டயானா எடுல்ஜி ஆகியோரும் கௌரவிப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion