மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? காலை 7 மணி தலைப்புச் செய்திகள்..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு
- வேங்கைவயல் கிராம குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. வீடு வீடாகச் சென்று விசாரணை
- பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் பழனிசாமி தரப்பில் அதிமுக மூத்த தலைவர்கள் சந்திப்பு. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை.
- ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அண்ணாமலையுடன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சந்திப்பு.
- ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவதாக ஓபிஎஸ் அறிவிப்பு.
- இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் சுயேட்சையாக போட்டியிடுவேன் என்றும், சின்னம் முடங்கக் காரணமாக இருக்க மாட்டேன் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
- இடைத்தேர்தல் விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்புடன் பேசத் தயாராக இல்லை. இரட்டை இலை சின்னம் தங்களுக்கே என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
- இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து அண்ணாமலை முடிவெடுப்பார் என பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
- ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், இளைய மகன் சஞ்சய்க்கு வாய்ப்பளிக்க கட்சி மேலிடத்திடம் கேட்டிருப்பதாகவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிப்பு.
- ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என பாமக அறிவிப்பு
- சென்னை, மெட்ரோ ரயிலின் மூன்றாவது வழித்தடத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல்.தரமணி, மயிலாப்பூர், பக்கிங்ஹாம் கால்வாய் அடிப்பகுதியில் விரைவில் கட்டுமானப் பகுதிகள் தொடக்கம்.
இந்தியா
- பாஜகவில் சேராவிட்டால் புல்டோசரை எதிர்கொள்ளுங்கள் என காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மத்தியப்பிரதேச அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
- அடிப்படை கல்வியை தாய்மொழியில் கற்க வேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம் - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
- பீகாரில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.
- தை அமாவாசையை ஒட்டி உத்திரப் பிரதேசம், பிரயக்ராஜில் சுமார் 1.5 கோடி பேர் கங்கை சங்கமத்தில் புனித நீராடினர்.
உலகம்
- பாகிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளில் 42 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் முர்தாசா ஜாவேத் அப்பாசி தெரிவித்துள்ளார்.
- காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணியாததால் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் உலகம் முழுவதும் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
விளையாட்டு
- உலகக்கோப்பை ஹாக்கி போட்டித் தொடரில் நாக் - ஆவுட் சுற்று இன்று முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
- நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சானியா-போபண்ணா ஜோடி வெற்றி
- நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion