கோடி ருபாய் குடுத்தாலும் பொது இடங்களில் இதெல்லாம் செய்யாதீங்க!!

Published by: ABP NADU

நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சி விண்ணை தாண்டியும் சென்றுவிட்டது.

தெரியாது என்று சொல்லும் விஷயங்கள் எதுவும் இல்லை என்ற அளவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளது.

இருந்தும் சிலருக்கு பொது இடங்களில் என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்ற புரிதல் இல்லை.

அப்படி பொது இடங்களில் செய்யும் சில விஷயங்களால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும்.

பொது இடங்களில் அந்நியர்கள் அதிகம் இருப்பர். அப்போது வருமானம் குறித்தோ அல்லது தனிப்பட்ட பிரச்சனைகள் குறித்தோ பேசாதீர்கள்.

பேசும்போது இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் ஆவண திருட்டு, கொள்ளை சம்பவங்கள் போன்ற பின்விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

உங்களின் சொந்த, தனிப்பட்ட விஷயங்களை பொது இடத்தில் மற்றவர்களிடம் கூறுவது பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும்.

பொது இடங்களில் தொலைபேசியில் சத்தமாக பேசினால், மற்றவர்கள் அசௌகரியமாக உணருவர். மேலும் உங்களின் சமூக மரியாதை குறையும்.

பொது வெளியில் யாருடனும் சண்டையிடாதீர்கள். இது மக்களின் அமைதியை கெடுத்து பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும்.

பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதோ அல்லது எச்சில் துப்புவதையோ முக்கியமாக செய்யக்கூடாது. தொற்றுநோய் பரவ முக்கிய காரணம் இதுவே.

இந்த விஷயங்களை எல்லாம் செய்வதால் எதிர்காலங்களில் பிரச்சனைகள் உண்டாகும் அபாயம் அதிகம் உள்ளது.