5g Auction: 10ஆவது சுற்று... மூன்றாம் நாளாக நடக்கும் 5ஜி ஏலம்...சூடுபிடிக்கும் நான்கு முனை போட்டி!
5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடானது, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 தேதிக்குள் முடிவடையும் எனவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் இன்று மூன்றாவது நாளாக நடைபெறும் நிலையில், ஏலம் 10ஆவது சுற்றை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மூன்றாவது நாள், 10ஆவது சுற்று
இந்தியாவில் 5G அலைக்கற்றைக்கான ஏலம், இன்று (ஜூலை. 26) தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் நான்கு சுற்றுகள் முடிவடைந்த நிலையில், முதல் நாள் முடிவில் 1.45 லட்சம் கோடி ரூபாய் வரை ஏலம் சென்றுள்ளதாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து நேற்று (ஜூலை.27) 5ஆவது சுற்றுடன் இரண்டாம் நாள் ஏலம் தொடங்கிய நிலையில், ரூ.4,000 கோடி மதிப்பிலான ஏலங்கள் பெறப்பட்டன.
5G spectrum auction enters Day 3, received bids worth Rs 1.5 trillion so far
— ANI Digital (@ani_digital) July 28, 2022
Read @ANI Story | https://t.co/j8k5r1p0Wb
#5GSpectrumAuction #5G pic.twitter.com/kSrIZNrCW0
முன்னதாக 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் போன்ற அலைவரிசைகள் அதிக ஏலத்தொகைக்கு சென்றதாகவும், ஏலத்தில் நல்ல போட்டி காணப்படுவதாகவும், தொலைத்தொடர்புத் துறை புதிய ஆற்றல் நிரம்ப காணப்படுவதாகவும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
நான்கு முனை போட்டி
5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடானது, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 தேதிக்குள் முடிவடையும் எனவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
4ஜி சேவையை வழங்கும் விலையிலேயே 5ஜி சேவையை வழங்க டெலிகாம் நிறுவனங்கள் திட்டமிட்டருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தின் அதிவேக சேவை அனுபவத்தை பயனாளர்களுக்கு அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வொர்க் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்