போன், லேப்டாப் என எங்கு பார்த்தாலும் ஆபாசப் படம்.. 20 வருட சேகரிப்பு.. சிக்கிய இசைக்கலைஞர்!
குழந்தைகள் பாலியல் செயல்களில் ஈடுபடும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருந்த 49 வயது நபரான இசைக்கலைஞரை இத்தாலிய போலீசார் நேற்று கைது செய்தனர்.
![போன், லேப்டாப் என எங்கு பார்த்தாலும் ஆபாசப் படம்.. 20 வருட சேகரிப்பு.. சிக்கிய இசைக்கலைஞர்! 49 year old Italian musician nabbed with 1 million child pornography files போன், லேப்டாப் என எங்கு பார்த்தாலும் ஆபாசப் படம்.. 20 வருட சேகரிப்பு.. சிக்கிய இசைக்கலைஞர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/19/789fba722f491ba9557dbb5e58c7e415_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குழந்தைகள் பாலியல் செயல்களில் ஈடுபடும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருந்த 49 வயது நபரான இசைக்கலைஞரை இத்தாலிய போலீசார் நேற்று கைது செய்தனர்.
உலகம் முழுவதும், குழந்தைகளின் ஆபாச படங்கள் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருந்ததற்காக பலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு, இத்தாலியில் குழந்தைகளை வைத்து நடத்தப்பட்டும் ஆபாச இணையதள நெட்வொர்க்கை போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு ஆதாரங்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களை வைத்து இத்தாலிய காவல்துறை கைது வாரண்டுகளுடன் பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. இதில் பலர் கைதும் செய்யப்பட்டனர்.
அந்த வகையில் தற்போது இத்தாலியில் இசைக்கலைஞர் ஒருவர் சிக்கியுள்ளார். அவரிடம் இருந்து ஏராளமான குழந்தை ஆபாச புகைப்படங்களையும் வீடியோக்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் “இத்தாலியின் மார்ச்சே பிராந்தியத்தில் உள்ள அன்கோனா என்ற கடலோர நகரத்தில் இசைக்கலைஞரான இவர், சுமார் 20 ஆண்டுகளாக புகைப்படங்களை சேகரித்து வந்துள்ளார். பல்வேறு ஹார்டு டிஸ்க்குகள், ஆப்டிகல் மீடியா மற்றும் ஸ்மார்ட்ஃபோன் ஆகியவற்றில் நிறைய ஃபைல்ஸ்களை வைத்திருந்தார். அவை பல்வேறு ஃபோல்டராகவும் பிரிக்கப்பட்டிருந்தன. அதில் புகைப்படம் மற்றும் வீடியோ வகை, பாதிக்கப்பட்டவர்களின் வயது ஆகியவற்றின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன.
துஷ்பிரயோகம் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், இசைக்கலைஞர் சிறார்களுக்கு பாடம் நடத்தினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் குழந்தைகளை வைத்து ஆபாச படங்கள் எடுப்பது மட்டுமல்லாமல் குழந்தைகள் ஆபாசப் படங்கள், பார்ப்பது, பகிர்வது, வைத்திருப்பது உள்ளிட்டவையும் குற்றம் என சட்டம் கொண்டு வரப்பட்டு இச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்த்தது மற்றும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தது தொடர்பாக பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு என தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு குழந்தைகளின் ஆபாசப் படங்களை அதிக அளவில் பார்த்து, பகிர்பவர்கள் தொடர்பான விபரங்கள் ஐ.பி அட்ரஸ் மூலம் பட்டியலிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: சீமான் மீது திமுக ஐடி விங்க் சார்பில் புகார்: மேடையில் செருப்பை காட்டிய விவகாரம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)