மேலும் அறிய

ஆஹா! அதிநவீனமாகும் வானிலை கண்காணிப்பு கருவிகள்.. மழையோ, புயலையோ கண்டு இனி அச்சம் வேண்டாம்!

வானிலை, பருவநிலை முன்னறிவிப்பை மேம்படுத்த இந்தியாவில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உலக நாடுகள் மீது காலநிலை மாற்றம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிக அளவில் மழை பெய்வதற்கும், வெள்ளம் ஏற்படுவதற்கும், இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதற்கும், காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகள்:

கடந்தாண்டு, இதுவரை சந்திக்காத காலநிலை பிரச்னைகளை உலக நாடுகள் சந்தித்தது. அதன் உச்சத்தை எட்டியது கூட சொல்லலாம். இதை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், வானிலை, பருவநிலை முன்னறிவிப்பை மேம்படுத்த இந்தியாவில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புவி அறிவியல் அமைச்சகம் (MoES) டெல்லியில் உள்ள பிரித்வி பவனில் மிஷன் மௌசம்  எனப்படும் வானிலை இயக்கம் குறித்த தேசிய அளவிலான பத்திரிகை விளக்க நிகழ்ச்சிக்கு  ஏற்பாடு செய்திருந்தது.

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் மிருதுஞ்சய் மொஹாபத்ரா, நடுத்தர நிலை வானிலை முன்னறிவிப்பு தேசிய மையத்தின் தலைவர் டாக்டர் வி.எஸ்.பிரசாத் ஆகியோர் ஊடகங்களிடம் பேசினர்.

வானிலை, பருவநிலை முன்னறிவிப்பை மேம்படுத்தும் திட்டம்:

இரண்டு ஆண்டுகளில் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீட்டில்,  2024 செப்டம்பர் 11 அன்று மத்திய அமைச்சரவை மிஷன் மவுசம் எனப்படும் வானிலை இயக்கம் என்ற திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இது மத்திய அரசின் லட்சிய முயற்சியாகும். இது இந்தியாவை வானிலை முன்னறிவிப்பில் நவீனமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பணி நாட்டின் வானிலை, பருவநிலை முன்னறிவிப்பை வேகமாக மேம்படுத்தும் நடவடிக்கையாகும்.

முன்மொழியப்பட்டவானிலை இயக்கத்தின் நோக்கங்கள் பின்வருமாறு:

  • அதிநவீன வானிலை கண்காணிப்பு தொழில்நுட்பங்கள், அமைப்புகளை உருவாக்குதல்
  • சிறந்த தற்காலிக, இடஞ்சார்ந்த வளிமண்டல  கணிப்புகளை செயல்படுத்துதல்
  • ·அடுத்த தலைமுறை ரேடார்கள், மேம்பட்ட கருவி பேலோடுகளுடன் செயற்கைக்கோள்களை செயல்படுத்துதல்
  • வானிலை, பருவநிலை செயல்முறைகள், முன்கணிப்பு திறன்களின் புரிதலை மேம்படுத்துதல்
  • மேம்படுத்தப்பட்ட புவி அமைப்பு மாதிரிகள், தரவு முறைகள் ஆகியவற்றை உருவாக்குதல்
  • வானிலை மேலாண்மைக்கான தொழில்நுட்பங்களை உருவாக்குதல்
  • கடைசி மைல் இணைப்பிற்கான அதிநவீன பரவல் அமைப்பை உருவாக்குதல்

இதையும் படிக்க: Jawan : ஜவான் படத்தில் நடித்தது ஒரு மோசமான அனுபவம்.. என்னை மோசமாக நடத்துனாங்க.. குமுறிய நடிகர்
         
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget