காத்து வாக்குல ரெண்டு காதல்! காதலனுக்காக பேருந்து நிலையத்தில் அடிபிடி சண்டையிட்ட 2 சிறுமிகள்!
சிறுமிகள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு அறிவுரை வழங்கிய பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
![காத்து வாக்குல ரெண்டு காதல்! காதலனுக்காக பேருந்து நிலையத்தில் அடிபிடி சண்டையிட்ட 2 சிறுமிகள்! 2 Girls Fight In Public Over Common Boyfriend Here What He Did காத்து வாக்குல ரெண்டு காதல்! காதலனுக்காக பேருந்து நிலையத்தில் அடிபிடி சண்டையிட்ட 2 சிறுமிகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/27/718209ac94c8f7a99e83f8c424655de51661573371682224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இளம் வயதில் ஒருவர் காதலில் விழுவது என்பது சகஜமான ஒன்று. இரண்டு பெண்கள் ஒரே இளைஞரை காதலிப்பது, இரண்டு ஆண்கள் ஒரே பெண்ணை காதலிப்பது, இதுவெல்லாம் காலம்காலமாக நடப்பது.
சமீபத்தில் கூட, இதன் அடிப்படையில்தான், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் கதை அமைந்தது. இப்படம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இம்மாதிரியான கதைகளின் அடிப்படையில், பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான சூழல்கள் படங்களில் வரும்போதே அனைவரின் கவனத்தை ஈர்க்கும்போது, உண்மையாகவே நடந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு சூழல்தான், மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
இச்சூழலில், மகாராஷ்டிர மாநிலம் பைதான் மாவட்டத்தில் 17 வயது சிறுமிகள் இருவர் பொது இடத்தில் ஒரே காதலனுக்காக சண்டையிட்டு கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை காவல்துறையினர் புதன்கிழமையன்று உறுதி செய்தனர்.
2 Girls Fight In Public Over Common Boyfriend. Here’s What He Did. https://t.co/SmBjOXoAPv
— Virasth (@VirasthNews) August 27, 2022
இச்சம்பவம் புதன்கிழமை காலை பைத்தானில் உள்ள மக்கள் கூட்டம் அதிகமான பேருந்து நிலையத்தில் நடந்துள்ளது. இருவரில் ஒரு சிறுமி காதலுடன் பேருந்து நிலையத்திற்கு சென்றார். இதை அறிந்த இன்னொரு சிறுமியும் அங்கு சென்றார்.
சிறுமிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இந்த சம்பவம், அங்கிருப்பவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து, அச்சிறுவன் அங்கிருந்து தப்பியோடினார். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்றனர். பின்னர், சிறுமிகள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு அறிவுரை வழங்கிய பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
மனிதர்களின் உணர்வு என்பது மாறி கொண்டே இருக்கும். எனவே, இருவர் மீது காதல் வருவது எல்லாம் சாதாரணமான ஒன்றுதான். ஆனால், இருவரையும் ஒரே நேரத்தில் காதலிப்பது என்பது தவறு. ஒருவருடனான உறவை முறித்து கொண்டே இரண்டாவது உறவை தொடங்க வேண்டும். இருவரையும் ஒரே நேரத்தில் காதலிப்பதாக ஏமாற்றுவது எல்லாம் சரியான செயல் அல்ல என சோஷியல் மீடியாவில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பதிவிட்டுள்ள மற்றொருவர், ‘காதலுக்கும் ஒரு வயது உள்ளது. பள்ளி படிக்கும் மாணவர்கள் சற்று நிதானத்துடன் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்
2 Girls Fight In Public Over Common Boyfriend at crowded bus stand https://t.co/QcJOTawhgO
— Telangana News Point (@mediainfodesk) August 26, 2022
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)