Tsunami 17 Years | மக்களை காவு வாங்கிய கடல்... சுனாமி ஏற்பட்டு 17 வருடங்கள்... நினைவுகூர வேண்டியது என்ன?
இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை, மலேசியா, தாய்லாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் உடனடியாக உணரப்பட்டது
இந்தியப் பெருங்கடலில் 2004-ஆம் ஆண்டு பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக சுனாமி உருவானது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர். உலகின் மிக மோசமான பேரழிவுகள் பட்டியலில் இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் இடம்பெற்றன.
2,30,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். அதேபோல் பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களும் நாசமாகின. 9.1 ரிக்டர் அளவில் கடலுக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் பாக்ஸிங் டே சுனாமி அல்லது சுமத்ரா-அந்தமான் பூகம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. CNN இன் அறிக்கையின்படி, நிலநடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது.
அதேபோல், "உலகளவில், இந்த நிலநடுக்கம் முழு கிரகத்தையும் அரை அங்குலம் அல்லது ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு அதிர்வுறும் அளவுக்கு பெரியதாக இருந்தது" என்று அமெரிக்காவில் உள்ள பென் ஸ்டேட் யுனிவர்சிட்டி மேற்கோள் காட்டியுள்ளது. இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை, மலேசியா, தாய்லாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் உடனடியாக உணரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சுனாமி தோன்றியதன் விளைவாக இந்தியப் பெருங்கடலை சுற்றியுள்ள பகுதிகள் அழிவை சந்தித்தன.
100 அடி உயர சுனாமி அலைகள் 14 நாடுகளில் முழுமையான அழிவை ஏற்படுத்தியது, இது பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாகும். புவியியல் மதிப்பீடுகளின்படி, 2004 நிலநடுக்கம் இதுவரை பதிவு செய்யப்படாத வகைகளில் மூன்றாவது பெரிய நிலநடுக்கம் ஆகும், 2004 சுனாமி அலைகளின் மொத்த ஆற்றல் இரண்டாம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட இரண்டு அணுகுண்டுகளின் ஆற்றலைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.
சுனாமியிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட இந்தியா, அக்டோபர் 2007 இல் ஹைதராபாத்தில் உள்ள இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையத்தில் (INCOIS) இந்திய சுனாமி முன் எச்சரிக்கை அமைப்பை (ITEWS) நிறுவியது. சுனாமியைக் கண்டறிவதற்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை நிறுவிய முதல் நாடு இந்தியா ஆகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Valimai | Ak | ஒரு ரேஸர் போலீஸான கதை ! - வலிமையில் அஜித் கேரக்டர் முதல் ஓட்டிய பைக் வரை.. சுவாரஸ்ய தகவல்கள் !