Idols Stolen: 10 சுவாமி சிலைகள் திருட்டு.. தமிழக காவல்துறை உதவியை நாடும் மகாராஷ்டிரா...
Idols Stolen: மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 சுவாமி சிலைகள் திருடப்பட்ட வழக்கில் தமிழக காவல்துறையின் உதவியை நாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Idols Stolen: மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 சுவாமி சிலைகள் திருடப்பட்ட வழக்கில் தமிழக காவல்துறையின் உதவியை நாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் ஆகஸ்ட் 22 அன்று கன்சாவாங்கி தாலுகாவில் உள்ள ஜம்ப் சமர்த் கிராமத்தில் உள்ள ராமர் கோயிலில் உள்ள சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். புகழ்பெற்ற சாது ராம்தாஸ் சமர்த்தின் பிறப்பிடமான கிராமத்தில் உள்ள கோவிலில் இருந்து குறைந்தது 10 சிலைகள் திருடப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது. இது தொடர்பாக மகாராஷ்டிரா சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் ஷிண்டே கூறியதாவது, " பழங்கால பொருட்களை கடத்துபவர்களை பின்தொடர்வதிலும், திருடப்பட்ட சிலைகளை மீட்பதிலும் தமிழக காவல்துறையின் சிலை பிரிவு முக்கிய பங்காற்றியுள்ளது. அவர்களின் சிறப்பான பணிகள் இந்த வழக்கில் தேவைப்படுகிறது. திருடப்பட்ட சிலைகளை மீட்க தமிழக காவல்துறையின் உதவியை நாட உள்ளதாக” அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, மர்ம நபர்கள் துப்பு கிடைத்ததை அடுத்து அவர்கள் மொபைல் போன்களில் இருந்து தரவுகளை ஆய்வு செய்ததில், திருடப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் வீசப்பட்டதாக தகவல் தெரியவந்தது. அதனால், ஜல்னா மாவட்டத்தில் அருகில் உள்ள கிராமத்தில், கிணறுகள் மற்றும் நீர்நிலைகளையும் சோதனை செய்தோம். ஆனால் எந்த பொருளும் கிடைக்கவில்லை என தெரிவித்தார். இந்த வழக்கு பல மாதங்களை கடந்து உள்ளதால் தமிழக காவல்துறையின் உதவியை நாட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் ஷிண்டே தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தின் சிலைத் தடுப்பு பிரிவின் நடவடிக்கையால் 138 சிலைகள் பல்வேறு நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டன. சில நாட்களுக்கு முன்பு கூட வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 10 சிலைகளை ஒரே நேரத்தில் தமிழக காவல்துறையால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்பு வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த, பல கோடி ரூபாய் மதிப்பிலான 9 சுவாமி சிலைகளை சிலை கடத்தல் பிரிவி போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் 7 சிலைகள், சுமார் 300 ஆண்டுகள் பழமையானவை. தட்சிணாமூர்த்தி, முருகன், வள்ளி, தெய்வாணை, சனீஸ்வரன், அம்மன், வீரபாகு சிலைகள், பீடத்துடன் கூடிய பெண் தெய்வம் சிலை என மொத்தம் 9 சிலைகள் தமிழக காவல்துறை மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கொடூரத்தின் உச்சம்...பைக்கில் காதலருடன் சென்ற பெண்...10 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை...