மேலும் அறிய

திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 5000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின

’’குறுவை சாகுபடிக்கான பயிர் காப்பீட்டை தமிழ்நாடு அரசு அறிவிக்காத நிலையில் கடும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக விவசாயிகள் வேதனை’’

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து நேற்று மற்றும் இன்றும் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சிறு தூரலாக மழை மாலை முதலே பெய்து கொண்டே இருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 5000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
 
குறிப்பாக திருவாரூர் சுற்றுவட்டார பகுதியில் 3 சென்டி மீட்டர் மழையும், மன்னார்குடி பகுதியில் 7 சென்டி மீட்டர் மழையும், முத்துப்பேட்டை பகுதியில் 6 சென்டி மீட்டர் மழையும், திருத்துறைப்பூண்டி பகுதியில் 4 சென்டி மீட்டர் மழையும் கொட்டி தீர்த்தது. இந்த கனமழையின் காரணமாக சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் ஒருபுறம் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நேற்று பெய்த தொடர் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் மாவூர், கச்சனம், கொரடாச்சேரி, குடவாசல், கோட்டூர், விக்கிரபாண்டியம், மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 5000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
 
ஏற்கனவே நடப்பாண்டில் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஆறுகளிலும் தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் குறுவை நெற்பயிரில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைப்பது சிரமம் என விவசாயிகள் கருதுகின்றனர். பயிர் காப்பீடு இல்லாத சூழலில் தங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். உடனடியாக மாவட்ட வருவாய்த் துறையும், வேளாண் துறையும் மழைநீர் தேங்கி உள்ள வயல்களை ஆய்வு செய்து உரிய கணக்கெடுப்பு நடத்தி நெற்பயிர் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண இழப்பீடு தொகையை வழங்க வேண்டுமெனவும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget