கத்திபாரா பாலத்தின் கதை தெரியுமா உங்களுக்கு ?

கத்திபாரா சந்திப்பு சென்னையின் மிக முக்கியமான சந்திப்பு. வாகன ஒட்டிகளுக்கு அது ஒரு குட்டி மலையின் வளைவுகளில் செல்லும் ஒரு பயண அனுபவத்தை ஒவ்வொரு முறையும் தருவதாய் இருக்கும்.

FOLLOW US: 

தமிழகத்தின் தலை நகர் சென்னையில் உள்ள கத்திபாரா மேம்பாலம் தான் ஆசியாவின் மிகப் பெரிய க்ளோவர் இலை(clover leaf) வடிவ மேம்பாலம் என்பது உங்களுக்கு தெரியுமா?. தமிழகம் தன்னகத்தே மிக நெடிய கட்டிடக்கலை வரலாற்றைக் கொண்டுள்ளது. பல்லவர்கள் காலம் தொடங்கி இன்று வரை கட்டிடக்கலை மீதான காதல் தமிழர்களின் வாழ்வியலில் ஒன்று. தொழிற்நுட்ப புரட்சி மற்றும் தொழில் துறை வளர்ச்சி கட்டடக்கலை துறையில் பல்வேறு வாயில்களை திறந்திருக்கின்றன. அதன் ஒரு படிமம் தான் கத்திபாரா மேம்பாலம். கத்திபாரா சந்திப்பு சென்னையின் மிக முக்கியமான சந்திப்பு. வாகன ஒட்டிகளுக்கு அது ஒரு குட்டி மலையின் வளைவுகளில் செல்லும் ஒரு பயண அனுபவத்தை ஒவ்வொரு முறையும் தருவதாய் இருக்கும்.கத்திபாரா பாலத்தின் கதை தெரியுமா உங்களுக்கு ?

கிண்டி மேம்பாலம் என்று அழைக்கப்படும் கத்திபாரா GST சாலை, அண்ணா சாலை, பூந்தமல்லி மற்றும் உள்வளைவு சாலை ஆகிய முக்கிய சாலைகளின் சந்திப்பு. கிண்டியில் உள்ள நான்கு முக்கிய சாலையின் சந்திப்பில் இருந்த  ரவுண்டானாவில் ஏற்பட்ட வாகன நெரிசலை சாமாளிக்க மேம்பாலம் கட்டும் திட்டம் 2005 ஆண்டின் வாக்கில் தொடங்கப்பட்டது. எவ்வித காத்திருப்பும் இன்றி வாகனங்கள் வேவ்வேறு திசைகளில் நான்கு முக்கிய சாலைகளுக்கும் செல்லும் விதமாக இரண்டு அடுக்கு மேம்பாலமாக Clover leaf வடிவத்திலான திட்ட வரைப்படம் தயாரனது. 2008 ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வராய் இருந்த திரு.கருணாநிதி அவர்கள் ஆசியாவின் மிகப் பெரிய Clover Leaf வடிவுடைய மேம்பாலத்தை திறந்து வைத்தார். இன்று அந்த நான்கு சாலை சந்திப்பை மூன்றே நிமிடங்களில் கடந்து விடலாம், மேம்பாலம் கட்டும் முன்பு குறைந்தது முப்பது நிமிடம் காத்திருக்க வேண்டும். எப்படி சாத்தியமாயிற்று இது?. அறிவோம் க்ளோவர் இலை வடிவ மேம்பாலம் பற்றி.கத்திபாரா பாலத்தின் கதை தெரியுமா உங்களுக்கு ?

வரைபடங்களிலோ அல்லது உயரமான இடத்தில் இருந்து பார்க்கும் போது இது க்ளோவர் இலை வடிவத்தை ஒத்ததாக இருப்பதனால் இது க்ளோவர் இலை வடிவ மேம்பாலம் அல்லது க்ளோவர் இலை பரிமாற்றம் என்று அழைக்கப்படுகிறது. க்ளோவர்லீஃப், இரண்டு, மூன்று அல்லது நான்கு தனிவழிகளை இணைப்பதற்கான எளிய வழி. வைர வடிவ பரிமாற்றங்கள்(Interchanges) கையாள முடியாத சிக்கலான சந்திப்பு சாலைகளில் க்ளோவர் இலை வடிவ மேம்பாலங்கள் உருவாக்கபடுகின்றன. அவற்றின் முக்கிய நன்மை என்னவென்றால் வாகனங்கள் எவ்வித காத்திருப்பும் இன்றி தடங்கல் இல்லாமல் இலகுவாக வெவ்வேறு திசைகளில் பயணிக்க முடியும். போக்குவரத்து சிக்னல்கள் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தத் தேவையில்லை. இவை தடுப்புகள் உள்ள இருவழி சாலைகளாய் இருப்பதால் எதிர் வரும் வாகனகங்களின் இடையூறின்றி செல்ல முடியும். அதன் அடிப்படையிலேயே இவை தனி வழி(freeways) சாலைக்களுக்கான விருப்ப வடிவமாக தற்காலத்தில் மாறிப்போனது. இதன் முக்கிய சாரம்சம் என்னவென்றால் நீங்கள் முதல் வளைவை தவறவிட்டால் பாலம் மேல்ஏறி அடுத்த வளைவில் இறங்கி இரண்டும் அல்லது முறை சுற்றி உங்களுக்கான வளைவுக்கு செல்லலாம், அதுவும் எவ்வித காத்திருப்பும்ன்று, தடையும் இன்றி. க்ளோவர் இலை வடிவுடைய மேம்பாலங்களை வடிவமைக்க அதிக அளவிலான இடம் தேவைபடுவதே இதன் முக்கிய பின்னடைவு. பின்னாளில் அதை எதிர்கொள்ள பூங்காக்கள், பொது மக்கள் கூடும் இடங்கள் உள்ளடக்கிய வரைபடங்கள் அமைக்கப்பட்டன.

 கத்திபாரா பாலத்தின் கதை தெரியுமா உங்களுக்கு ?

கத்திபாரா மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதிகளில் தற்போது நடைப்பெற்று வரும் பணிகளை நாம் பார்த்திருப்போம், ஆம் அவை பொது மக்களின் பயன்பாட்டிற்கு ஏதுவான பூங்காக்கள், பார்க்கிங் வசதி, பேருந்து நிறுத்தம் போன்ற செயல்பாடுக்களுக்காக தயாராகி கொண்டிருக்கிறது. வேகமாய் செல்லும் வாகனங்களுக்கு மட்டுமல்ல, மெதுவாய் நடக்க விரும்பும் மக்களுக்குமாய் தன்னை புனரைமைத்து கொண்டிருக்கிறது ஆசியாவின் மிகப் பெரிய க்ளோவர் இலை வடிவுடைய கத்திப்பாரா மேம்பாலம். இனி ஒவ்வொரு முறையும் கத்திபாரா மேம்பாலத்தில் செல்லும் போதும் நினைவில் கொள்வோம் நாம் பயணிப்பது கட்டிடக்கலையின் மகத்தான கண்டுப்பிடிப்பின் மீது என்று.

Tags: tamil news kathipara bridge guindy bridge best bridge in tamilnadu Kathipara junction

தொடர்புடைய செய்திகள்

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

’5 லட்சத்தில் திருமணம்: 38 லட்சத்தில் நன்கொடை’ : வாரி வழங்கிய ஆச்சரிய மணமக்கள்..!

’5 லட்சத்தில் திருமணம்: 38 லட்சத்தில் நன்கொடை’  : வாரி வழங்கிய ஆச்சரிய மணமக்கள்..!

Black Fungus | கோவையில் 123 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு : அதிகரிக்கும் அச்சம்..!

Black Fungus | கோவையில் 123 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு : அதிகரிக்கும் அச்சம்..!

பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!

பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!

டாப் நியூஸ்

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

Aspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..!

Aspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..!