வேலை நிறுத்தம் தொடரும் – கோவை ஆட்சியரகம் முன் வருவாய்த்துறை அலுவலர்கள் அறிவிப்பு
வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் கேட்டு தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்.

சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், வரையறுக்கபட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஆட்சியரகம் முன் வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதம் நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் பந்தல் அமைத்து வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அரசு தங்களின் கோரிக்தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கோரிக்கைகளை பல மாதங்களாக வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாவிடில் போராட்டம் தொடரும் எனவும் தமிழக அரசுக்கு வருவாய்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
Before You Go
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















