Nallakannu Death: ஈடு செய்ய முடியாத இழப்பு! நல்லகண்ணு மறைவுவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்
நல்லகண்ணுவின் இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என தவெக தலைவர் விஜய் இரங்கல் பதிவு வெளியிட்டுள்ளார்

சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் தலைவருமான நல்லகண்ணு இன்று உயிரிழந்த நிலையில், அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நல்லகண்ணு மறைவு:
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கம்யூனிஸ்ட் தலைவரான இன்று காலமானார், அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர் மற்றும் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தவெக விஜய் இரங்கல்:
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திசுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்.
அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மறைந்த தோழர், அய்யா இரா. நல்லகண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என்று விஜய் தனது இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார்
அருண்ராஜ் தவெக:
விடுதலைப் போராட்ட வீரரும், அரசியலில் தூய்மைக்கும், பொதுவாழ்வில் நேர்மைக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த இடதுசாரி இயக்கத்தின் மூத்த பெருந்தகை, முதுபெரும் தலைவர் ஐயா நல்லக்கண்ணு அவர்கள் இயற்கை எய்திய செய்தி கேட்டு மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைகிறோம்.
தமிழகத்தின் நில உரிமைப் போராட்டங்கள் தொடங்கி, இயற்கை வளங்களைக் காக்கும் களங்கள் வரை தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காகவே அர்ப்பணித்தவர். அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும், எளிய மக்களுக்கும் ஒரே மாதிரியான மரியாதையையும் அன்பையும் தந்தவர்.
ஐயா நல்லக்கண்ணு அவர்களின் மறைவு என்பது ஒரு இயக்கத்தின் இழப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவர் விட்டுச் சென்ற நேர்மை மற்றும் எளிமை எனும் விழுமியங்களைப் போற்றிப் பாதுகாப்பதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.
அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், இடதுசாரித் தோழர்களுக்கும், தமிழக மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
























