பால் மட்டுமே பிரதானம்.. பயன் ஏதும் இல்லை.. கலப்பின மாடுகளுக்கே டிமாண்ட்.. விளைவென்ன?
பால் மட்டுமே பிரதானம் பயன் ஏதும் இல்லை கலப்பின ஆதிக்கத்தால் அழியும் அரிய பசுக்கள்
ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை பசு பாராட்டு நாள் என்ற பெயரில் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினமானது பசுக்களை மரியாதை உடனும் போற்றுதல் உடன் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
இந்த வகையில் பசுவும் அது தரும் பலன் பயன்களும் எத்தனை முக்கியமானது என்பதை நாம் உணர வேண்டியது மிகவும் அவசியம் என்கின்றனர் கால்நடை ஆராய்ச்சியாளர்கள்.
ஒவ்வொரு மனிதனும் நலமுடன் வாழ்வதற்கு தேவை ஆரோக்கியம் இதில் மழலையாக இருந்து முதியவர் ஆகி மறையும் வரை நமது உடலுக்கு ஊட்டம் தரும் முக்கியமான உணவுப்பொருள் பால் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பாலை நமக்கு கொடுப்பது பசுக்கள்.
பசும்பால் என்பது கால்சியத்தை அதிகரித்து எலும்புகளை வலுவாக்கி நமது மனிதர்களின் உடல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. தாய்ப்பாலை தாய் நிறுத்தினாலும் ஒரு குழந்தைக்கு தொடர்ந்து ஊட்டச்சத்தை தருவது பசுக்களும் மாடுகள் தரும் பால் தான்.
விவசாயத்திலும் பசுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புற்களை மேய்வதன் மூலம் தாவர வளர்ச்சியை கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பதிலும் பசுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பால், இறைச்சி மட்டுமின்றி பல்வேறு தோல் பொருட்களும் நமக்கு கிடைப்பதற்கு பசுக்கள் காரணமாக இருக்கிறது. இப்படி பல்வேறு நிலைகளில் நமது வாழ்க்கையில் பயணிக்கும் பசுக்கள் கலப்பினம் என்ற பெயரில் அதன் தனித்தன்மையை இழந்து வருகிறது என்பது ஆய்வாளர்கள் வெளிப்படுத்தும் ஆதங்கம்.
இது குறித்து பாரம்பரிய பசுவிடங்கள் குறித்து ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:-
தற்போது சூழலில் பாரம்பரிய பசுவினங்களை பய ன் பாதுகாப்பதை விட பால் உற்பத்தியில் மட்டுமே மக்களின் கவனம் அதிக அளவில் உள்ளது. இதனால் அவர்கள் கலப்பின மாடுகளையே அதிக அளவில் விரும்புகின்றனர்.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக மரபணு மாற்றப்பட்ட பசுக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜெசி, பிரியன் ரெட்டி, பிரவுன் என்ற அல்ட்ரா மாடல் பெயர்களைக் கொண்ட பசு வளர்ப்பதில் தான் ஆர்வம் அதிகம் உள்ளது.
அதிகம் பால் சுரக்கும் என்பது மட்டுமே இது போன்ற கலப்பினால் பசுக்களால் நமக்கு கிடைக்கும் ஆதாயம். இதில் ஜெர்சி பசுக்களில் வேர்வை நாளங்களும் திமில்களும் இல்லாததால் அவற்றின் வெப்பம் பால் போன்றவை சிறுநீர் மூலமே வெளியேறுகிறது.
இவற்றின் கன்றுகள் 6 முதல் 8 மாதத்திற்கு பருவமடைகின்றன. இவற்றின் சாணம் சிறுநீர் போன்றவற்றால் மண்ணுக்கு எந்த பலனும் இல்லை இப்படி ஒவ்வொரு கலப்பின பசுக்களிலும் அதிகம் உள்ளது.
எனவே இந்நாட்டின் பசுக்களை மீட்டெடுக்க நாம் உறுதி ஏற்க வேண்டும். ஒரு காலத்தில் பசுக்கள் தான் நமது விவசாயத்திற்கே முதுகெலும்பாக இருந்தது. என்பதையும் உணர வேண்டியது அவசியம் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மனிதர்களைப் போல் உணர்ச்சித் திறன் உள்ளது
மனிதர்களைப் போல் நமது பாரம்பரிய பசுக்களுக்கும் உணர்வு திறன் உண்டு மகிழ்ச்சி, சோகம், பயம், கோபம் பதற்றம் என்ற பலவிதமான உணர்ச்சிகளை அவை காட்டுகின்றன. பசுக்களின் வெவ்வேறு உணர்ச்சிகளை அவற்றின் உடலில் ஏற்படும் மாற்றத்தை வைத்து அறியலாம் பசுக்கள் அழுத்தமாக இருக்கும் போது கண்களின் வெள்ளை பகுதி அதிகமாக தெரியும் நிம்மதியாக அல்லது மகிழ்ச்சியாக இருக்கும்போது அதன் காதுகள் தளர்வாக தொங்கும்.
தங்கள் கன்றுகளிடம் இருந்து பிரிக்கப்படும் போது உன்னிப்பாக கவனித்து அவற்றின் கண்களின் வெள்ளை நிறத்தை காணலாம் மனித தாய்மார்கள் நாங்கள் குழந்தைகளை விட்டு பிரியும் போது அழுவார்கள் அதே போல் பசுக்களும் கன்றுகளின் பிரிவை தாங்காமல் அழுவதை நாம் பார்க்க முடியும்.
எனவே நமது பாரம்பரிய பசுக்களை மீட்டெடுப்பதன் மூலம் விவசாயமும் ஆரோக்கியமும் காப்பாற்ற முடியும் என்கிறார்கள்