பள்ளி மாணவர்களின் சத்துணவு முட்டைக்கு ஆபத்து! வேட்டையாடும் வன குரங்குகள்
மாரண்டஹள்ளியில் அரசு பள்ளி சத்துணவு முட்டையை எடுத்து வந்து உண்ணும் குரங்குகள்-வனப் பகுதியை விட்டு வெளியே வந்த குரங்குகள் உணவு முறை மாறி, அசைவம் உண்ணும் குரங்குகள்.
தருமபுரி மாவட்டத்தில் பெரும்பாலான வனப் பகுதிகளை அமைந்துள்ளது. இதில் சில வனப் பகுதிகளுக்கு அருகில், கிராம பகுதிகளும் இருந்து வருகிறது. இந்நிலையில் அரூர், தொப்பூர், பென்னாகரம், ஒகேனக்கல் போன்ற பகுதிகளில் அதிகளவு வனப் பகுதிகள் இருப்பதால் அங்கு குரங்குகள் அதிகமாக இருந்து வருகிறது.
இதனால் வனப்பகுதிகளில் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவுகக்கு தேவையான காய்கள், பழங்கள், இலை, தலைகள் உள்ளிட்ட அனைத்தும், வனப் பகுதியிலேயே வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான குரங்குகள் உணவைத் தேடி வனப் பகுதியை விட்டு வெளியேறி, அருகில் உள்ள கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்து வருகிறது. இவ்வாறு கிராமப் பகுதிகளுக்குள் வரும் குரங்குகள், வீடுகளில் நுழைந்து, உணவு பண்டங்களை எடுத்துச் செல்வது, குழந்தைகள் கையில் வைத்திருக்கும் தின்பண்டங்களை பறித்து செல்வது, விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை அழிப்பது என பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு தொடக்கப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கு தினந்தோறும் சத்துணவில் முட்டையும் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாரண்டள்ளி பகுதியில் வனத்தைவிட்டு வெளியில் வந்த குரங்குகள், நகர் பகுதிக்குள் சுற்றி வருகிறது.
நகர் பகுதிக்குள் சுற்றி வரும் குரங்கு வீடுகளில் நுழைந்து உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதும், குழந்தைகள் வைத்திருக்கும் தின்பண்டங்களை பறித்து செல்வது என நகர் பகுதிக்கு பொதுமக்களுக்கு தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது.
இந்நிலையில் வனப் பகுதியை விட்டு, நகர் பகுதிக்குள் வந்த குரங்குகளின் உணவு முறை முற்றிலுமாக மாறி உள்ளது. வனப் பகுதிகளில் உள்ள குரங்குகள் அசைவத்தை உண்பதில்லை. ஆனால் தற்பொழுது நகர் பகுதிக்குள் நுழைந்துள்ள குரங்குகள், இயற்கை உணவு மட்டுமல்லாமல் இறைச்சி போன்ற அசைவ உணவுகளையும் உண்டு வருகிறது.
இந்நிலையில் மாரண்டஅள்ளி அரசு தொடக்கப்பள்ளி அருகே சுற்றி தெரியும் குரங்குகள்,பள்ளியில் சமையலறைக்கு சென்று முட்டைகளை எடுத்துச் செல்கிறது. ஒரு குரங்கு, மூன்று, நான்கு முட்டைகளை எடுத்துச் சென்று ஓடுவதும், அதனை பார்த்து மற்ற குரங்குகள், முட்டைகளை பறித்து செல்வதும் நடந்து வருகிறது.
இந்நிலையில் முட்டை எடுத்து வந்த குரங்குகள், சண்டை போட்டதில் ஒரு முட்டை கீழே விழுந்து உடைந்து விட்டது. அதனை ஒரு குரங்கு வாயை வைத்து முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை ரசித்து, ருசித்து வந்தது. குரங்குகள் இயற்கையை உணவு வகையை மட்டுமே உண்ணும், அசைவ உணவை குரங்குகள் உண்ணாது. ஆனால் இங்கு முட்டையின் வெள்ளை, மஞ்சள் கருவை ரசித்து சாப்பிடுவதை அந்த பகுதியில் உள்ள மக்கள் வினோதமாக பார்த்தனர்.