மேலும் அறிய
Advertisement
ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக கடலை, தேங்காய் எண்ணெய் விற்க வேண்டும் - விவசாயிகள் சாலை மறியல்
கடந்த சட்டமன்ற தேர்தலில், கொடுத்த வாக்குறுதியை நடைமுறைக்கு கொண்டு வந்து, இந்த பாமாயிலுக்கு பதில் கடலை, தேங்காய் எண்ணெய்களை தமிழக அரசு கொள்முதல் செய்து நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்.
திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, தமிழகத்தில் நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வலியுறுத்தி தருமபுரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் செய்த விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
கடந்த 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது, தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் தேங்காய் எண்ணெய், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு, நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது. ஆனால் சட்டமன்ற தேர்தலின்போது, சொன்ன வாக்குறுதி இன்று வரை அதனை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தில் உள்ளனர். இதனால் வெளி நாடுகளில் இருந்து 72 சதவீதம் எண்ணெய் வித்துக்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் உள்நாட்டு எண்ணெய் வகைகளான கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை ஊக்கப்படுத்தாமல், அரசு இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து மாதம் 1 கோடியே 96 லட்சம் லிட்டர் பாமாயிலை, லிட்டர் ரூ.100க்கு இறக்குமதி செய்கிறது.
இதில் லிட்டருக்கு ரூ.70 மானியமாக வழங்கப்படுகிறது. ஆனால் நியாய விலை கடைகளில் ரூ.30க்கு பாமாயில் விற்கப்படுகிறது. இதனால் மக்களின் வரி பணத்தில் ரூ.1500 கோடி பாமாயில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய், தற்போது 10 ரூபாயாக குறைந்து விட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலில், கொடுத்த வாக்குறுதியை நடைமுறைக்கு கொண்டு வந்து, இந்த பாமாயிலுக்கு பதில் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்களை தமிழக அரசு கொள்முதல் செய்து நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து தருமபுரி சேலம் செல்லும் சாலையில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சாலை மறியலால் சேலம்-தருமபுரி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion