மேலும் அறிய

2000 ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கி அசத்திய மாவட்ட ஆட்சியர் சாந்தி

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொடக்க நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த சுமார் 2000 ஆசிரியர்களுக்கு கையடக்க கணினியை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நல்லம்பள்ளி, பென்னாகரம், காரியமங்கலம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கடத்தூர், ஏரியூர் ஆகிய ஒன்றிங்குகளில் 1575 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதில் தர்மபுரி அரூர் தொடக்கக்கல்வி மாவட்டத்தில் மட்டும் 1165 தொடக்கம் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.

 இப்பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இதில் 2000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் மாறிவரும் கற்றல் கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் திட்டத்தை கடந்த ஜூன் 14ஆம் தேதி தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தர்மபுரி தொடக்கக்கல்வி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 1246 ஆசிரியர்களுக்கு நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி கையெடுக்க கணினிகளை வழங்கினார்.

 இதேபோல் அரூர் தொடக்க  கல்வி ஆசிரியர்களுக்கும் கையடக்க கணினி வழங்கப்பட்டது. இந்நிலையில் தர்மபுரி கல்வி மாவட்ட தொடக்க கல்வியாளர் மான்வழி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மாண்வெளி கூறியதாவது:-

 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையடக்க கணினியை பயன்படுத்தி மாணவர்கள் கற்றல் நிலை அறிதல், மதிப்பீடுகள் செய்தல், எமிஸ் பணிகளை மேற்கொள்ளுதல், கிராமப்புறங்களில் இணையதள முறையை எளிதாக மேற்கொள்ளுதல், தமிழக கல்வித்துறை யால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து செயலிகளையும் பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் நிலையினை மேம்படுத்திக் கொள்ளலாம்.

 தனிப்பட்ட வளர்ச்சிக்காக மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி தொகுப்புகளை பயன்படுத்த முடியும். ஆசிரியர்கள் கையடக்க கணினிகள் மூலம் பயிற்சிகள் மற்றும் மதிப்பீடுகளை மேற்கொள்ளலாம். ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை எளிதாக எந்த நேரத்திலும் எங்கிருந்தாலும் கண்காணிக்க முடியும்.

 ஆசிரியர் ஒரே பாடத்தை வெவ்வேறு வழிகளில் கற்பிக்க மின் கற்றல்  முறையை பயன்படுத்தலாம். இதனால் தனிப்பட்ட அணுகுமுறை வழங்குகிறது. இது கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை ஒருங்கிணைக்க உதவும் மாணவர்களின் கற்றல் விளைவுகளில் நேர்மையான மாற்றத்தை கொண்டுவர உதவுகிறது.

 தர்மபுரி அரூர் தொடக்கக்கல்வி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 2000 ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
3டி தொழில்நுட்பத்துடன் போட்டியிடும் கைவினை களிமண்  பொம்மைகள்- மயிலாடுதுறையில் கலக்கும் இளைஞர்....!
3டி தொழில்நுட்பத்துடன் போட்டியிடும் கைவினை களிமண் பொம்மைகள்- மயிலாடுதுறையில் கலக்கும் இளைஞர்....!
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLANArun IPS Transfer Order : 24 INSPECTOR-கள் TRANSFER..ஒரே நேரத்தில் பறந்த ஆர்டர்! அருண் IPS வார்னிங்!Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
3டி தொழில்நுட்பத்துடன் போட்டியிடும் கைவினை களிமண்  பொம்மைகள்- மயிலாடுதுறையில் கலக்கும் இளைஞர்....!
3டி தொழில்நுட்பத்துடன் போட்டியிடும் கைவினை களிமண் பொம்மைகள்- மயிலாடுதுறையில் கலக்கும் இளைஞர்....!
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
சாம்சங் நிறுவனத்திற்கு தொடரும் தலைவலி... குடும்பத்துடன் போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்
சாம்சங் நிறுவனத்திற்கு தொடரும் தலைவலி... குடும்பத்துடன் போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்
Crime: பிளஸ் 1 மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்த இரும்பு வியாபாரி கைது!
Crime: பிளஸ் 1 மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்த இரும்பு வியாபாரி கைது!
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
அத்வானிக்கு கார் ஓட்டியவர் தான் மோடி! 75 வயாதாகியும் போய் பார்க்கவில்லை - சிவி சண்முகம் தாக்கு
அத்வானிக்கு கார் ஓட்டியவர் தான் மோடி! 75 வயாதாகியும் போய் பார்க்கவில்லை - சிவி சண்முகம் தாக்கு
Embed widget