மேலும் அறிய

சீக்கிரமா தடுப்பணை கட்டுங்க; நிலத்தடி நீர் மட்டும் குறையுது: வேதனையில் தவிக்கும் விவசாயிகள்

நீரை சேமிக்க முடியாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவருவதாக விவசாயிகள் கவலை

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே வேப்பாடி ஆறு அரை கிலோமீட்டர் தூரத்தில் செல்கிறது. சேலம் மாவட்டம் சேர்வராயன் மலை ஏற்காடு பகுதியின் வடக்கு பகுதியில் இருந்து காட்டாறுகள் ஒன்று கூடி   வேப்பாடி ஆறாக உருவாகி ஓடுகின்றது.

பின்னர்  பொம்மிடியின் அருகில் அமைந்துள்ள ஆனைமடுவு என்ற இடத்தில் தருமபுரி மாவட்ட எல்லைக்குள் நுழைகிறது.  இங்கிருந்து  தொப்பையாறுடன் கலந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தொப்பையாறு அணையில் இணைந்து, மீண்டும்  தொப்பூர் அருகே சேலம் மாவட்ட எல்லைக்குள் சென்று விடுகிறது.

மழைக்காலங்கள் தொடங்கி  வருடத்தில் பல மாதங்கள் நீர் செல்லும் இந்த வேப்பாடி ஆற்றில் மாவட்ட எல்லையில் உள்ள ஆணைமடுவு என்ற இடத்தில் அணை கட்ட வேண்டும் என தொடர்ந்து இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த திட்டம் நிறைவேற்றப் பட்டால்   50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள இரு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறு ம் வாய்ப்புள்ள நிலையில், இது குறித்து இந்து தமிழ்திசையில்   கடந்த ஆண்டு  செய்தி வெளியான நிலையில், அடுத்த சில நாட்களில்  தருமபுரி  மாவட்ட ஆட்சியர்  சாந்தி மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் இத்திட்டம் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து சென்றனர்.

பின்னர் வேப்பாடியாற்றில் தடுப்பணைக் கட்டுவது குறித்து மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு  வடிவமைப்பு பிரிவு சென்னை அலுவலகத்திற்கு கொடுக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது, இந்நிலையில் இத்திட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையே காணப்படுகின்றது.

இது இப்பகுதி விவசாயகள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியான நிலையை உண்டாக்கியுள்ள நிலையில்,ஏற்கனவே இந்த ஆற்றுப்பகுதியில் செல்லும்  நீரினை தடுத்து சுற்றுப்புறப்பகுதிகளில் நிலத்தடி நீரை சேமிக்கும் பொருட்டு  பல்வேறு இடங்களில் சிறு,சிறு தடுப்பணைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இவைகள் போதிய பராமரிப்பு இல்லாததால் தற்போது உடைந்து பழுதடைந்து காணப்படுகின்றது,  பல்வேறு இடங்களில் முற்றிலும் தடுப்பணைகள் இல்லாத அளவு சேதமுற்றுள்ளது.இதன் காரணமாக ஆற்றில் நீரை தேக்கி வைக்கமுடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொம்மிடி சமூக ஆர்வலர் ஜெபசிங் கூறுகையில்,  வேப்பாடி ஆறு மூலம் ஏற்காடு அடிவாரத்தில் ஓர் நீர் தேக்கம் கட்டக்கூடிய அளவிற்கு நீர் வரத்து உள்ளது.ஏற்கனவே வேப்பாடி ஆற்றின் குறுக்கே செம்மியானூர் பகுதியில் சிறிய அளவினான அணை கட்ட ஆட்சியர் உட்பட பல அதிகாரிகள் ஆய்வு செய்து உள்ளனர், இந்த வேப்பாடி ஆற்றின் குறுக்கே சிறிய அளவில்  பல தடுப்பணைகள் உள்ளன.

இவை முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் மழை காலங்களில் ஆற்றில் ஓடும் நீரினை தடுத்து நிறுத்த வாய்ப்பு இல்லாமல் உள்ளது.பொம்மிடி நகரின் தெற்கு பகுதியில்அமைந்துள்ள இந்த ஆற்றில் உள்ள தடுப்பணைகளில் நீர் தேக்கி வைக்கப்பட்டால் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்து நல்ல செழிப்பு உண்டாகும்,பழுதடைந்துள்ள தடுப்பணைகளால் ஆற்றில் நீர் சென்று விடுகின்றது.

இதனால் இப்பகுதியில்  நீர் மட்டம் குறைந்து கொண்டே செய்கின்றது , இதனை சரி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

தலைப்பு செய்திகள்

" 10 ஆண்டுகளாக அக்கிரமம் " பள்ளி மாணவிக்கு ஆபாச மெசேஜ் !! பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (24-09-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தருமபுரியில் நாளை (24-09-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
மக்கள் பிரச்சனை முக்கியமில்லையா? ஆதவ் அர்ஜூனாவை கிழித்த ஜோஸ் சார்லஸ் மார்டின்
மக்கள் பிரச்சனை முக்கியமில்லையா? ஆதவ் அர்ஜூனாவை கிழித்த ஜோஸ் சார்லஸ் மார்டின்
Dharampuri power cut: தருமபுரியில் நாளை (17-09-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தருமபுரியில் நாளை (17-09-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Mahindra Thar OG Review: புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
Embed widget