Corona LIVE Updates : பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் செல்வதை ரத்துசெய்ய வேண்டும் - தமிழக அரசு
Corona LIVE Updates : சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகம் முழுக்கவே கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. முக்கிய நகரங்களில் மட்டுமே தடுப்பூசி கிடைப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
LIVE
Background
தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக 11 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று ஒரேநாளில் 13 ஆயிரத்து 776 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஒரேநாளில் 13 ஆயிரத்தை கடந்திருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் நேற்று ஒரேநாளில் 8 ஆயிரத்து 78 நபர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று மாநிலம் முழுவதும் 78 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகம் முழுக்கவே கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. முக்கிய நகரங்களில் மட்டுமே தடுப்பூசி கிடைப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
தமிழக அரசு ஆக்சிஜன் தேவையை நிறைவுசெய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொண்டுசெல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என முதல்வர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
டெல்லியில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு..
டெல்லியில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில், ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
குடமுழுக்கு விழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை - தமிழக அரசு
குடமுழுக்க விழாவை 50 நபர்களுடன் நடத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கோயில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டு உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. புதியதாக குடமுழுக்கு மற்றும் திருவிழா நடத்த அனுமதியில்லை.
இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு தொடர்ந்து அமல் - தமிழக அரசு
- தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதியில்லை.
- வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டும் பயணிக்கவும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்கவும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டள்ளது. இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி - தமிழக அரசு
அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் செயல்பட வேண்டும். இதன்படி, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும்.
உணவகங்கள், தேநீ்ர கடைகளில் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி - தமிழக அரசு
அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், தேநீர் கடைகளில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு 26-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் தடை விதிக்கப்படுகிறது.