மேலும் அறிய

Vanathi Srinivasan: முதல்வர் வருகைக்காக கோவையில் ரோடு... அடிக்கடி முதல்வர் கோவை வரவேண்டும்... கோரிக்கை வைத்த வானதி சீனிவாசன்

கமல்ஹாசன் தயாரித்து ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. அவர்கள் செய்யும் பல காரியங்களில் நல்ல காரியமாக அமரன் திரைப்படத்தை எடுத்துள்ளது கூடுதல் மகிழ்ச்சி.

கோவை மாவட்டம் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய பேருந்து நிழற்குடையை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை அதிகமான நிதி அங்கன்வாடிகளுக்குத்தான் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறினார். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில், நிலம் முழுவதும் காலி செய்யப்பட்டு வழங்கப்படவில்லை என்றும் இதனால் பணிகளை தொடங்குவதில் மத்திய அரசுக்கு சுணக்கம் இருப்பதாய் தகவல் வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். எனவே நிலம் முழுவதும் முழுமையாக காலி செய்யப்பட்டு ஒப்படைப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை வரவிருக்கும் முதல்வரிடம் கேட்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

Vanathi Srinivasan: முதல்வர் வருகைக்காக கோவையில் ரோடு... அடிக்கடி முதல்வர் கோவை வரவேண்டும்... கோரிக்கை வைத்த வானதி சீனிவாசன்

கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு கேட்கும் தகவல்களை மாநில அரசு உடனடியாக விரைந்து அனுப்ப வேண்டும் என முதல்வரிடம் கேட்க இருப்பதாகவும் கூறினார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக தலைவர் விஜய் மீது வைத்துள்ள விமர்சனம் குறித்து, இன்னொரு தலைவர் விமர்சனத்திற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றார்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் பாஜகவின் லட்சியம் என்றும் உணவு சார்ந்து மொழி சார்ந்து பாஜக மீது வைக்கப்படும் விமர்சனங்கள் உண்மையல்ல என்றும் கூறினார்.

கடந்த முறை கோவை வந்த முதல்வரிடம் கோவையின் முன்னேற்றத்திற்காக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்திருந்ததாகவும் அதில் ஒரு சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், இன்னும் புதிய கோரிக்கைகள் இருப்பதாகவும் முதல்வரிடம் நேரில் ஒப்படைக்க இருப்பதாகவும் கூறினார்.

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு விஜயின் எதிர்ப்பு குறித்து, ஒரே நாடு ஒரே தேர்தலில் இருக்கக்கூடிய சாதக பாதகங்களை அரசியல் கட்சி யோசிக்க வேண்டும் என்று கூறிய அவர், வெறுமனே அனைவரும் கூறுகிறார்கள் என்பதற்காக எதிர்க்க கூடாது என்றார்.

Vanathi Srinivasan: முதல்வர் வருகைக்காக கோவையில் ரோடு... அடிக்கடி முதல்வர் கோவை வரவேண்டும்... கோரிக்கை வைத்த வானதி சீனிவாசன்

கோயம்புத்தூரில் சாலைகள் சரியாக இல்லை என்று கூறிய அவர், முதலமைச்சரின் வருகைக்காக கோயம்புத்தூரில் ரோடு போடுகிறார்கள் என்றால் அடிக்கடி முதல்வர் கோவை வரவேண்டும் என்று கோரிக்கை வைப்பதாகவும் கூறினார்.

பிராமண சமுதாயத்திற்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது என்றும் தங்கள் சமுதாயம் குறித்து தவறாக பேசுபவர்கள் மீது PCR சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிராமணர்களின் கோரிக்கை நியாயமானது என்றும் கூறினார்.

அமரன் திரைப்படம் குறித்து, தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு தேசப்பற்றும் மிக்க திரைப்படமாக அமரன் திரைப்படம் இருக்கிறது. படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், இந்த படத்தை கமலஹாசன் தயாரித்து ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. அவர்கள் செய்யும் பல காரியங்களில் நல்ல காரியமாக அமரன் திரைப்படத்தை எடுத்துள்ளது கூடுதல் மகிழ்ச்சி. அமரன் திரைப்படத்தை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக திரையிட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Embed widget