மேலும் அறிய

தேர்தல் நேரத்தில் நாடகமாடும் திமுகவை மக்கள் புரிந்து கொள்வார்கள் - வானதி சீனிவாசன்

"தேர்தல் வந்தால் மட்டும் கோவிலுக்கு செல்வார்கள். நெற்றியில் விபூதி பூசுவார்கள். தேர்தல் முடிந்த அடுத்த நிமிடம் பார்த்தால் உடனடியாக கோவிலுக்கு செல்வோர்களை திட்டுவார்கள். இது திமுகவினரின் நாடகம்"

கோவை அவினாசி சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “வருகிற 13-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நீலகிரி, பொள்ளாச்சி, கோவை ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். கோவையில் பிரம்மாண்டமான மகளிர் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 50,000 பெண்கள் கலந்து கொள்ள கூடிய பிரம்மாண்ட பேரணியில், அண்ணாமலை மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ள உள்ளனர். பாரதிய ஜனதா கட்சிக்கு ஒவ்வொரு நாளும் பலம் அதிகரித்து செல்கிறது. குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பாரதிய ஜனதா கட்சி இருக்கின்றது என்ற மாயை, அதனை எல்லாமே இந்த தேர்தல் உடைத்துப் போட்டு விடும்.

அது கிராமப்புற, நகரப்புற பகுதிகளாக இருந்தாலும், படித்தவர்கள், படிக்காதவர்கள் ஏழைகள், பணக்காரர்கள் இளைஞர்கள், முதியவர்கள் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் அத்தனை பேர் இடத்திலும் பிரதமர் மோடி மீதான அன்பு தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்தாக வேண்டும் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை எடுக்கின்ற முயற்சிக்கு மக்கள் ஆதரவு பெருகி கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் களம் முழுமையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவாக இருக்கின்றது.  இன்றைய உகாதி தினத்தில் தெலுங்கு மொழி பேசும் அனைவருக்கும் தெலுங்கு வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு மாநிலத்தின் முதல்வர் தேர்தல் நேரத்தில் மட்டும் தி.மு.க வினருக்கு வியாதி உள்ளது. தேர்தல் வந்தால் மட்டும் கோவிலுக்கு செல்வார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் நெற்றியில் விபூதி பூசுவார்கள். கேட்டால் நாங்கல்லாம் கோயிலுக்கு செல்வோம் என எந்த வித்தியாசம் இல்லை என்று சொல்வார்கள். தேர்தல் முடிந்த அடுத்த நிமிடம் பார்த்தால் உடனடியாக கோவிலுக்கு செல்வோர்களை திட்டுவார்கள்.

திமுகவினரின் நாடகம்

சாமியை தவறாக பேசுகின்றனர். இது திமுகவினரின் நாடகம். தற்பொழுது பார்த்தால் உகாதி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். மக்கள் கொண்டாடுகின்ற சித்திரை 1 க்கு அனைவரிடத்திலும் தமிழ் புத்தாண்டு என்று கேட்டால் சித்திரை ஒன்று தான் என்று கூறுவார்கள். ஆனால் தி.மு.கவினர் தை ஒன்று தான் தமிழ் புத்தாண்டு என்று கூறுகிறார்கள். அதன் பிறகு அந்த தை 1 யை யாரும் கொண்டாடுவதில்லை. சித்திரை 1 க்கு என்ன செய்யப் போகிறார் என்று பார்க்கலாம். மாநிலத்தின் முதல்வர் தீபாவளிக்கு வாழ்த்து கூறவில்லை. அது குறித்து சட்டம் பேரவையில் கேள்வி எழுப்பியதற்கு, சிறுபான்மை இனத்தவருக்கு வாழ்த்து கூறும் நீங்கள் இந்து பண்டிகைகளுக்கும் கூறுங்கள் தப்பில்லை. ஒரு முதல்வர் மக்களின் அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து கூறுவதற்கு என்ன கஷ்டம்? தேர்தல் நேரத்தில் நாடகம் என மக்கள் புரிந்து கொள்வார்கள்.

ஆ.ராசா முன்பு எப்படி எப்படி எல்லாம் மோசமாக பேசினார்? அதற்கு ஊடக நண்பர்களிடத்தில் வீடியோ இருக்கும். தேர்தல் நேரம் வந்தால் வேறொரு வேஷம் போட ஆரம்பிப்பார்கள். அதனால் தி.மு.கவினுடைய வேசத்தை எல்லாம் மக்கள் நிறைய முறை பார்த்து உள்ளோம். தேர்தல் அறிக்கை மத்தியில் குழு அமைத்து உள்ளது. அந்தக் கூட்டம் மூன்று நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இன்றும் கூட சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர்கள் பங்கு பெற முடியாமல் அந்தப் பணியில் தான் ஈடுபட்டு கொண்டு உள்ளோம். கூடிய விரைவில் தேர்தல் அறிக்கை வந்துவிடும். மக்களுக்கு பத்து ஆண்டு காலம் என்னென்ன செய்து உள்ளோம். இதைத் தாண்டி என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை தேர்தலில் அறிக்கையில் சொல்லுவோம்” எனக் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
TN Congress New Leader: IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.? ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.. ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
ஏமாந்து போன இளம்பெண்.. WFH வேலை வாங்கி தருவதாக 15 லட்சம் அபேஸ்.. மோசடி கும்பலின் பலே டெக்னிக்
"நல்ல சம்பளம் வாங்கி தரோம்" WFH வேலை வாங்கி தருவதாக மோசடி.. 15 லட்சம் அபேஸ்! 
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
Embed widget