மேலும் அறிய

'முதலமைச்சரை காப்பாற்ற திமுகவின் கூட்டணி கட்சிகள் முயற்சிப்பது ஏன்?' - வானதி சீனிவாசன் கேள்வி

”முதலமைச்சருக்கு தெரியாமல் நடந்து விட்டது என்றால் தமிழகத்தில் உள்ள, திமுக அரசு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இயங்குகிறதா? அல்லது வெளியில் இருந்து வேறு சில சக்திகள் அரசை இயக்குகிறதா?”

பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகளில் மதுபானங்களை விநியோகிக்க சிறப்பு அனுமதி அளிக்கும் அரசாணையை, ஒரே நாளில் தி.மு.க. அரசு திரும்பப் பெற்றுள்ளது. அதுபோல, 12 மணி நேரம் வேலை சட்டத்தையும் நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் இது போல ஓர் அறிவிப்பை, ஓர் உத்தரவை ஓர் அரசாணையை வெளியிட்டுவிட்டு திரும்பப் பெறுவது ஏற்கனவே நடந்திருக்கிறது. திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளுக்கு இதை விட சிறந்த உதாரணம் எதுவும் இருக்க முடியாது. 

திருமண மண்டபங்களில், விருந்து நிகழ்ச்சிகளில் மதுபானங்களுக்கு அனுமதி என்ற முடிவை, தமிழ் கலாசாரத்தை நன்கறிந்த ஒருவரால் நிச்சயமாக எடுத்திருக்கவே முடியாது. ஏழை, நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை அறிந்திராத ஓர் அரசு தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதற்கு இந்த அரசாணையே சிறந்த எடுத்துக்காட்டு. தமிழ் மக்களிடம் ஏற்பட்ட கடும் கொந்தளிப்பு, திமுக அரசை பணிய வைத்திருக்கிறது. ஒரு பக்கம் சட்டப்பேரவையில் 500 மதுக் கடைகளை குறைப்போம் என்று அறிவித்துவிட்டு, மறுபக்கம், மதுவை ஆறாக ஓட விடும் திட்டத்தை அறிவித்து மக்களை முட்டாள் ஆக்க நினைத்துள்ளது திமுக அரசு. இது தகவல் தொழில்நுட்ப புரட்சி யுகம். இப்போது எந்தவொரு ஏமாற்று வேலையும் மக்களிடம் எடுபடாது. உண்மையை ஒரு நொடியில் மக்கள் உணர்ந்து விடுவார்கள். 

திமுக அரசின் முடிகளுக்கு தமிழக மக்களிடம் கடும் எதிர்ப்பு எழும்போதெல்லாம், முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் நடந்து விட்டது என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் முயற்சித்து வருகின்றன. இதற்காக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுப்பது, கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து முதலமைச்சருக்கு வக்காலத்து வாங்குவது என்று ஒரு நாடகத்தை ஒவ்வொரு முறையும் அரங்கேற்றி வருகின்றனர். வரும் லோக்சபா தேர்தலில் திமுகவிடம் இருந்து அதிக தொகுதிகளை பெற வேண்டும்,  கடந்த லோக்சபா தேர்தலைப் போலவே திமுகவிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற வேண்டும் என்ற கவலை, திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக மக்களை ஏமாற்ற நினைத்தால் அது இனி எடுபடாது. முதலமைச்சருக்கு தெரியாமல் நடந்து விட்டது என்றால் தமிழகத்தில் உள்ள, திமுக அரசு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இயங்குகிறதா? அல்லது வெளியில் இருந்து வேறு சில சக்திகள் அரசை இயக்குகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு  முதலமைச்சர் ஸ்டாலின்தான் பதில் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
coimbatore power cut: ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
Kia Sorento: மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
Hyundai Creta EV: விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Embed widget