மேலும் அறிய

ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை

Promotions Transfers Government order : அரசு அதிகாரிகள், பணியிட உயர்வு, பணியிட மாற்றத்திற்கு முதலமைச்சரின் ஒப்புதல் இனி கட்டாயம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் தொடர்பாகவும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் ஒப்புதல்- அரசாணை வெளியீடு

தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை பிடித்து அசத்தியுள்ளது. அந்த வகையில் எந்த ஒரு துறையிலும் ஊழல் இருக்க கூடாது என கடும் உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தவறு செய்யும் அதிகாரிகளின் பணியிடமானது மாற்றப்பட்டு வருகிறது. மேலும் சஸ்பெண்டும் செய்யப்படுகிறது. இந்த நிலையில், பதவி உயர்வு, பணியிட மாற்றங்களுக்கு முதலமைச்சரின் ஒப்புதல் தேவை என அதிரடியான அரசாணையானது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், மாநில தகவல் ஆணையம், தமிழ்நாடு லோக் ஆயுக்தா, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான  தலைவர் நியமனம் தொடர்பான கோப்புகள் கவர்னரின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிட மாற்றம், பதவி உயர்வு- அரசாணை

அதேநேரத்தில், தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் நியமனங்களுக்கு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டியதில்லை என கூறப்பட்டுள்ளது.  மேலும் முக்கியமாக  அரசு செயலாளர்கள், அரசு துறைத் தலைவர்கள், கூடுதல் செயலாளர்கள், அகில இந்திய பணியாளர் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், கூடுதல் பதிவாளர்கள் ஆகியோரின் பணி இடமாற்றம்,

பதவி உயர்வு தொடர்பான அனைத்து கோப்புகளும் முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் தமிழக அரசின் வாதங்களை நீதிமன்றங்களில் எடுத்துரைக்கும் அரசு தலைமை வழக்கறிஞர், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர், உயர்நிலைப் பதவிகளுக்கான நியமனங்களும் இனி முதலமைச்சரின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துதல்- முதல்வர் ஒப்புதல் கட்டாயம்

அதே நேரம் உயர் நீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்களுக்கான இதர சட்ட அலுவலர்களின் நியமனங்களை எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் முடிவு செய்வார் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேருக்கு மேல் உள்ள நிலம் கையகப்படுத்தப்படுத்துவது தொடர்பாக குறிப்பாக ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை,மின்வழித்தடம், தொழில் வழித்தடம், சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், வருவாய், பேரிடர் மேலாண்மை அமைச்சரின் ஒப்புதல் பெற வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளுக்கு ஸ்கெட்ச்

இதே போல முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் எந்த எந்த அதிகாரிகளுக்கு பணி உயர்வு, பணியிட மாற்றம் வழங்க அதிகாரம் தொடர்பாகவும், எந்த எந்த கோப்புகளுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஒப்புதல் கொடுப்பார்கள் எனவும் அந்த அரசாணையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையின் மூலம் முதலமைச்சரின் உத்தரவு இல்லாமல் எந்த பதவி உயர்வும் இனி வழங்க முடியாது என்பதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
Kia Sorento: மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
Hyundai Creta EV: விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Embed widget