மேலும் அறிய

நீலகிரி : காட்டு யானை தாக்கி மேலும் ஒருவர் உயிரிழப்பு ; பொதுமக்கள் அச்சம்..!

இரண்டு நாட்களில் இரண்டு பேரை காட்டு யானை தாக்கி கொன்றதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காட்டு யானையை உடனடியாக கிராமப்பகுதியில் இருந்து விரட்ட வேண்டுமென வலியுறுத்தினர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரூற்றுபாறை கிராமத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆனந்த் (46) என்பவர் காட்டு யானை தாக்கி பலியானார். அப்பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் வசித்து வந்த அவர், ஆரூற்றுபாறை பஜாரில் டீக்கடை நடத்திவந்தார். வழக்கம் போல கடை திறக்க வந்த போது, எதிரே வந்த காட்டு யானை தாக்கி  கொன்றது.  இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து யானையை விரட்டினர். இதனைத் தொடர்ந்து அங்கு குவிந்த கிராம மக்கள் 5 மணிநேரம் உடலை சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து வனத்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக அந்த யானையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். மேலும் முதுமலையில் இருந்து கும்கி யானைகள் உதவியுடன் அந்த யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதனிடையே அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் வழியாக சென்ற காட்டு யானை, அங்குள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் தஞ்சம் அடைந்தது. யானை வழக்கமாக செல்லும் வழியில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. பிரகாஷின் இரண்டு பெண் குழந்தைகளான ரஷ்மிதா மற்றும் பிரவீனா தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று இருவரும் பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு எழுத தயாராக இருந்த நிலையில், அவர்களது வீட்டு வழியாக சென்ற காட்டு யானை அவர்களின் வீடு அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் தஞ்சம் அடைந்திருந்தது. தேர்வுக்குச் செல்ல நேரம் ஆன நிலையில் காட்டு யானை எந்நேரமும் வரலாம் என்ற அச்சத்தில் மாணவிகள் இருவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இதனால் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. 


நீலகிரி : காட்டு யானை தாக்கி மேலும் ஒருவர் உயிரிழப்பு ; பொதுமக்கள் அச்சம்..!

இதனிடையே காட்டு யானைகளை விரட்ட முதுமலையில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற சீனிவாசன் மற்றும் விஜய் என்ற 2 கும்கி யானைகள் அந்த பகுதிக்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. காட்டு யானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு ஓவேலி பேரூராட்சிகுட்பட்ட பாரம் பகுதியில் வசித்து வரும் மும்தாஜ் என்கின்ற மாலுமா (38) என்பவர்,  அருகில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்று சாம்பார் வாங்கிக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது எதிரே வந்த காட்டு யானை அவரது வீட்டுக்கு முன்பாகவே கடுமையாக தாக்கியதில் மும்தாஜ் உயிரிழந்தார். 

இதனை அடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் சத்தம் போட்டு யானை விரட்டினர். பின்னர் அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள் அங்கு வந்த வனத்துறையினர் வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வனத்துறையினரிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுனர். இரண்டு நாட்களில் இரண்டு பேரை காட்டு யானை தாக்கி கொன்றதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

காட்டு யானையை உடனடியாக கிராமப்பகுதியில் இருந்து விரட்ட வேண்டுமென வலியுறுத்தினர். வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து 5 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து மும்தாஜின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

“உதயநிதிக்கு நல்ல புத்தி கொடு” – தோப்புக்கரணம் போட்டு இந்து மக்கள் கட்சி போராட்டம்...
“உதயநிதிக்கு நல்ல புத்தி கொடு” – தோப்புக்கரணம் போட்டு இந்து மக்கள் கட்சி போராட்டம்...
அதிமுக பலவீனமா.? - எடப்பாடியை நேரடியாக விமர்சித்த செங்கோட்டையன்...
அதிமுக பலவீனமா.? - எடப்பாடியை நேரடியாக விமர்சித்த செங்கோட்டையன்...
யோகாவில் மிரட்டிய சிறுவர்–சிறுமிகள்!! கோவையில் நடந்த உலக சாதனை முயற்சி...
யோகாவில் மிரட்டிய சிறுவர்–சிறுமிகள்!! கோவையில் நடந்த உலக சாதனை முயற்சி...
டாஸ்மாக் முன் ரகளை... போதை உச்சத்தில் கோவையில் மணல் தாக்குதல்...
டாஸ்மாக் முன் ரகளை... போதை உச்சத்தில் கோவையில் மணல் தாக்குதல்...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

திருமணம் செய்ய மறுத்த மாணவி இளைஞரின் கொலைவெறிச் செயல் திருச்சியில் கொடூரம்!
Leema Rose vs EPS | ”என் மேல நடவடிக்கையா? அப்போ பணத்தை கொடுங்க” EPS-ஐ நெருக்கும் லீமா ரோஸ்
4 Year Old boy Rescued |30 அடி போர்வெல் குழி!9 மணி நேர போராட்டம்..உயிருடன் சிறுவன் மீட்பு
பிறந்தநாள் அன்று மரணம்! மதுபோதையால் வந்த வினை! பதறவைக்கும் தஞ்சாவூர் விபத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Reopen Date: மாணவர்களே.. ஜூன் 1 பள்ளிகள் திறப்பு; புது பாடத்திட்டம்- அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
School Reopen Date: மாணவர்களே.. ஜூன் 1 பள்ளிகள் திறப்பு; புது பாடத்திட்டம்- அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
Leema Rose Martin : ‘லீமா ரோஸ் கையில் அதிமுக?’ தலையில் அடித்துக்கொள்ளும் தலைவர்கள்..!
‘லீமா ரோஸ் கையில் அதிமுக?’ தலையில் அடித்துக்கொள்ளும் தலைவர்கள்..!
MK Stalin Vs Vijay: “தவெக ஆட்சி நடத்த தொந்தரவாக இருக்கப் போவதில்லை, ஆனால்..“ ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட் என்ன தெரியுமா.?
“தவெக ஆட்சி நடத்த தொந்தரவாக இருக்கப் போவதில்லை, ஆனால்..“ ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட் என்ன தெரியுமா.?
ICAI: இனி சிஏ பாடத்தில் ஏஐ, டேட்டா அனலிட்டிக்ஸ் அறிமுகம்; ஐசிஏஐ அதிரடி- இதுதான் காரணம்!
ICAI: இனி சிஏ பாடத்தில் ஏஐ, டேட்டா அனலிட்டிக்ஸ் அறிமுகம்; ஐசிஏஐ அதிரடி- இதுதான் காரணம்!
Thirumavalavan: ”எல்லாமே கிசுகிசுப்பு, முணுமுணுப்பு தான்..அதிகாரப்பூர்வமாக பேசவில்லை” - திருமாவளவன் விளக்கம்
Thirumavalavan: ”எல்லாமே கிசுகிசுப்பு, முணுமுணுப்பு தான்..அதிகாரப்பூர்வமாக பேசவில்லை” - திருமாவளவன் விளக்கம்
EPS vs SPV: இபிஎஸ்க்கு செக் வைத்த எஸ்பிவி டீம்.! அடுத்து நடக்கப்போவது என்ன.? காத்திருக்கும் ட்விஸ்ட்
இபிஎஸ்க்கு செக் வைத்த எஸ்பிவி டீம்.! அடுத்து நடக்கப்போவது என்ன.? காத்திருக்கும் ட்விஸ்ட்
Nexon Victoris Rivals: நெக்ஸானுகே கஷ்டம், இதுல விக்டோரிஸ் மாடலுக்குமா? டாடா, மாருதிக்கு போட்டியாக ஹோண்டாவின் கார்கள்
நெக்ஸானுகே கஷ்டம், இதுல விக்டோரிஸ் மாடலுக்குமா? டாடா, மாருதிக்கு போட்டியாக ஹோண்டாவின் கார்கள்
CM Vijay: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு, பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் விஜய் ஆலோசனை
CM Vijay: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு, பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் விஜய் ஆலோசனை
Embed widget