மேலும் அறிய

Sirkazhi MLA Senthil Selvan : நான் திமுக உறுப்பினர்.! மதிமுகவிற்கு டாடா காட்டிய சீர்காழி எம்எல்ஏ.! ஷாக்காகி நிற்கும் வைகோ- நடந்தது என்ன.?

Sirkazhi MLA Senthil Selvan : தவெக கூட்டணியில் இணைய மதிமுக திட்டமிட்டுள்ள நிலையில், சீர்காழி தொகுதி மதிமுக எம்எல்ஏ நான் திமுக உறுப்பினர் என கூறி உயர்நிலைக்குழு கூட்டத்தை புறக்கணித்திருப்பது வைகோவிற்கு ஷாக் கொடுத்துள்ளது.

தவெக அமைச்சரவையில் திமுக கூட்டணி கட்சிகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் திமுக- அதிமுகவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த வகையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகளோடு கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்ட திமுக தோல்வி அடைந்தது. அதே நேரம் விஜய் தலைமையிலான தவெக பெரும்பான்மை தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், ஆட்சி அமைக்க 10 எம்எல்ஏக்களின் ஆதவு தேவை என்ற நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தவெக கூட்டணிக்கு பல்டி அடித்தது. தவெக அமைச்சரவையிலும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் பங்கேற்றது.

அமைச்சரவையில் இடம்பெற முடியாமல் தவிக்கும் மதிமுக

அதே நேரம் திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற மதிமுகாவால் அமைச்சரவையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டாலும் தனி சின்னத்தில் போட்டியிடாமல் திமுக சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டது. இதனால் மதிமுக சார்பாக 2 இடங்களில் வெற்றி பெற்றாலும் அந்த இரண்டு எம்எல்ஏக்களும் திமுக எம்எல்ஏவாகவே கருதப்படுவார்கள். இதனால் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்க முடியாத நிலையானது ஏற்பட்டது.இந்த நிலையில் அதிமுகவில் இருந்து 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய திட்டம்

எனவே திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக கூட்டணியில் இணைய வைகோ திட்டமிட்டுள்ளார். மேலும் மதிமுக 2 எம்எல்ஏக்களை தங்கள் தொகுதிகளில் ராஜினாமா செய்ய வைத்து தவெக ஆதரவில் தேர்தலை எதிர்கொள்ள மதிமுக திட்டமிட்டது. இதற்காக மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடையநல்லூர் மதிமுக எம்எல்ஏ பங்கேற்ற நிலையில் சீர்காழி எம்எல்ஏ பங்கேற்கவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சீர்காழி எம்எல்ஏ செந்தில் செல்வன் கூறுகையில், நான் திமுக உறுப்பினராக உள்ளேன். இதனால் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்கவேண்டிய தேவை இல்லையென கூறியுள்ளார்.

மதிமுகவிற்கு டாடா காட்டிய சீர்காழி எம்எல்ஏ

எனவே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், இடைத்தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா.? என்ற சந்தேகத்தின் சீர்காழி எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கனவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

குறுநில மன்னர் பேராசை! - சி.வி.சண்முகத்தை கிழித்து தொங்கவிட்ட அதிமுக ஒன்றிய செயலாளர்!
குறுநில மன்னர் பேராசை! - சி.வி.சண்முகத்தை கிழித்து தொங்கவிட்ட அதிமுக ஒன்றிய செயலாளர்!
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
முதல்வர் விஜய் அமல்படுத்திய போட்டி டெண்டர் முறை... ஒரே டெண்டரில் ரூ.9 லட்சம் மிச்சப்படுத்திய சென்னை மாநகராட்சி!
முதல்வர் விஜய் அமல்படுத்திய போட்டி டெண்டர் முறை... ஒரே டெண்டரில் ரூ.9 லட்சம் மிச்சப்படுத்திய சென்னை மாநகராட்சி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Hyundai Neira E-MPV: 490KM ரேஞ்சில் ஹுண்டாயின் புதிய 7 சீட்டர் மின்சார எம்பிவி - அம்சங்கள், வசதிகள் - விற்பனை எப்போது?
490KM ரேஞ்சில் ஹுண்டாயின் புதிய 7 சீட்டர் மின்சார எம்பிவி - அம்சங்கள், வசதிகள், விலை - விற்பனை எப்போது?
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Embed widget