மேலும் அறிய

”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை

Pune Murder: கேதன் அகர்வால் கொலை செய்யப்பட்ட மலையிலிருந்து கீழே தள்ளி தங்களது மகளையும் கொன்று விடுங்கள் என, சியா கோயலின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

Pune Murder: தன்னை திருமணம் செய்யவிருந்த கேதனை பேச அழைத்துச் சென்று மலையின் மீது இருந்து கீழே தள்ளி சியா கோயல் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

”அதே மலையில் இருந்து கீழே தள்ளுங்கள்”

தங்களது மகள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கேதன் அகர்வால் கொலை செய்யப்பட்ட அதே மலையில் இருந்து கீழே தள்ளி கொல்லுங்கள் என, சியா கோயலின் பெற்றோர் மனமுடைந்து பேசியுள்ளனர். புனேவைச் சேர்ந்த சியா, அவரது காதலன் என கூறப்படும் பாபுலால் சவுத்ரி உடன் சேர்ந்து, நிச்சயம் செய்யப்பட்டு தனது கணவராகவிருந்த கேதன் அகர்வாலை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் சஹ்யாத்ரி மலைத்தொடரில் உள்ள லோகட் கோட்டையிலிருந்து 26 வயதான கேதன் அகர்வாலை சியாவும் சேதனும் தள்ளிவிட்டதில் , அவர் கீழே விழுந்து உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் ஆரம்பத்தில் தற்செயலான விபத்தாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

”எனது மகளையும் மலையில் இருந்து தள்ளுங்கள்”

ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் வரும் நவம்பர் மாதம் இருவருக்கும் பிரமாண்டமாக திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில் நடந்த இந்த கொலை சம்பவம் தேசிய அளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சியா கோயலின் பெற்றோர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளனர். அப்போது பேசிய தாயார் பூஜா கோயல், ”தனது மகள் சியா, கேதனுடனான தனது திருமணம் குறித்து ஒருபோதும் அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை. கேதனின் மரணம் ஒரு குடும்பத்தை மட்டுமல்ல, இரண்டு குடும்பங்களையும் சீர்குலைத்துவிட்டதால், அவரது குடும்பத்தினரை விட தான் அதிக வேதனையில் இருக்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர் தன் மகளாக இருந்தாலும், அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். என் மகள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், கேதன் தள்ளி கொல்லப்பட்ட அதே இடத்திலிருந்து அவளையும் தூக்கி எறிய வேண்டும்” என ஆவேசமாக பேசியுள்ளார்.

எனது மகள் என்பதால் ஆதரவாக பேசமாட்டேன்..

சியாவின் தந்தை பிரவீன் கோயல் பேசுகையில், "கேதன் வீழ்ந்த கோட்டையிலிருந்து, குற்றம் சாட்டப்பட்டவர் என் சொந்த மகளாக இருந்தாலும் கீழே தள்ளப்பட வேண்டும். இதை நம்பவே கடினமாக இருக்கிறது. அவர்கள் தங்கள் மகனை இழந்துவிட்டார்கள், அந்த மகன் எங்களுக்கும் சொந்தமானவன்தான். நாங்கள் அவனை மிகவும் நேசித்தோம். அவன் மீது எனக்கு இருந்த பாசம், அவன் எங்கள் சொந்த மகன் போலவே இருந்தது. அப்படிப்பட்ட அன்பான, நம்பிக்கைக்குரிய, நல்ல பையனை நாங்கள் இழந்துவிட்டோம். அதனால் நாங்கள் ஆழ்ந்த துயரத்தில் இருக்கிறோம்" என்று பிரவீன் கோயல் கவலை தெரிவித்துள்ளார்.

கொலையில் முடிந்த முக்கோண காதல்..

நண்பர்கள் குடும்பத்தைச் சேர்ந்த கேதனுக்கும், சியாவிற்கும் இடையே திருமண ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கடந்த ஆண்டு தொழில்ரீதியான கூட்டத்தில் சேதனைச் சந்தித்த நிலையில், சியா மற்றும் சேதன் இருவருக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில்  காதலாக உருவெடுத்துள்ளது. சியா ஒரு பேக்கரியை நடத்தி வந்த நிலையில், சேதன் உலர் பழங்கள் வியாபாரம் செய்து வந்தார். கேதன், சக்சஸ் குரூப் என்ற குடும்பத்தால் நடத்தப்படும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநராகவும், தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாகவும் (CMO) இருந்தார்.

இதையும் படியுங்கள்: Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?

வெளியாகியுள்ள தகவல்களின்படி, சியா கேதனைத் திருமணம் செய்ய விரும்பவில்லை என்றும், தனது இந்த நிலைப்பாட்டை வருங்காலக் கணவரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், திருமணத்தை ரத்து செய்ய கேதன் தயாராக இல்லை என்றும், அதன் விளைவாகவே கொலை செய்ததாகவும் விசாரணையின் போது சியா கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Embed widget