மேலும் அறிய

Kanimozhi: நிக்காத பஸ்சுக்கு பஸ் ஸ்டாப் எதுக்கு? கனிமொழியை கும்பலாக கேள்வி கேட்ட பெண்கள்

தூத்துக்குடியில் பேருந்தே நிற்காத நிலையில் பேருந்து நிறுத்தம் எதற்கு என்று கனிமொழியிடம் பெண்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி. இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள ஓடக்கரை பகுதியில் புதியதாக கட்டியுள்ள பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்தார். 

கனிமொழியிடம் பெண்கள் ஆவேசம்:

இந்த பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்த கனிமொழியிடம், அந்த பகுதி பெண்கள் இந்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்தே நிற்பது இல்லை, ஒரு வாரத்தில் பேருந்தை முதலில் நிற்க சொல்லுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்த கனிமொழி எங்க முதலமைச்சராக இருந்தால் ஒரு வாரத்தில் பண்ணி இருப்பேன் என்று பதில் கூறினார். 

கனிமொழியின் இந்த பதிலால் அந்த பெண்கள் அதிருப்தி அடைந்தனர். அவர்கள் அப்படி பேசாதீங்க என்று கூறினர். இதையடுத்து, கனிமொழி அந்த இடத்தில் இருந்து எந்த பதிலும் கூறாமல் சிரித்துக் கொண்டே சென்று விட்டார். இதனால், அங்கிருந்த பெண்கள் மேலும் ஆவேசம் அடைந்தனர். பேருந்து நிறுத்தம் திறந்தால் போதுமா? பேருந்து நிற்க வேண்டாமா? என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். 

அனிதா ராதாகிருஷ்ணன் திமுக-தானே?

மேலும், ஆட்சியில் திமுக இல்லாவிட்டாலும் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன்தானே ஆவார். அவர் திமுகதானே. அவர் நினைத்தால் செய்யலாம்தானே? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், கடந்த 5 ஆண்டுகாலமாக திமுக-வின் ஆட்சியே நடைபெற்று வந்தது. அப்போதும் பேருந்து நிற்கவில்லையே ஏன்? என்றும் பொதுமக்கள் பெண்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். தூத்துக்குடியின் மக்களவை உறுப்பினர் கனிமொழி பெண்கள் கேள்விக்கு முறையாக பதிலளிக்காமல் சென்றதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இந்த ஓடக்கரை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை முறையாக நிறுத்தி செல்ல தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Embed widget