மேலும் அறிய

கோவை : முடங்கிக் கிடக்கும் பசுமை வீடுகள் கட்டுமானப் பணிகள்: பரிதவிக்கும் பழங்குடியின மக்கள்..!

முதலைமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி துறை சார்பில் வீடுகள் கட்டும் பணிகள் துவங்கிய நிலையில், இரண்டு வருடங்களாகியும் பணிகள் முடிக்கப்படாமல் பாதியில் நிற்கின்றன.

கோவை மாவட்டம் இக்கரை பூலுவம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பழங்குடியின கிராமங்களில் சோலார் வசதியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுவதற்கு கடந்த 2020ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ஏற்கனவே வசித்து வந்த வீடுகளை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிதாக வீடுகள் கட்டும் பணிகள் துவங்கியது. 88 வீடுகளுக்கு முதலைமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ்  ஊரக வளர்ச்சி துறை சார்பில் வீடுகள் கட்டும் பணிகள் துவங்கிய நிலையில், இரண்டு வருடங்களாகியும் பணிகள் முடிக்கப்படாமல் பாதியில் நிற்கின்றன.

கோவை : முடங்கிக் கிடக்கும் பசுமை வீடுகள் கட்டுமானப் பணிகள்: பரிதவிக்கும் பழங்குடியின மக்கள்..!

நரசிபுரம் அருகே உள்ள பட்டியார் கோவில்பதியில் உள்ள இருளர் சமுதாயத்தை சார்ந்த 25 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், பணிகள் துவங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையிலும் வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் பயனாளிகள் சாலை ஓரத்தில் உள்ள குடிசையில் வசித்து வருகின்றனர். 

கோவை : முடங்கிக் கிடக்கும் பசுமை வீடுகள் கட்டுமானப் பணிகள்: பரிதவிக்கும் பழங்குடியின மக்கள்..!

இது குறித்து அப்பகுதி பழங்குடியின மக்கள் கூறுகையில், ”தாங்கள் ஏற்கனவே வசித்து வந்த வீடுகள் சிதிலமடைந்த நிலையில், அதனை மாற்றி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டும் பணி 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் பணிகள் துவங்கிய நிலையிலேயே இன்றும் உள்ளதால், சாலை ஓரத்தில் குடிசை போட்டு வசித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில், பாதுகாப்பு பாதுகாப்பற்ற சூழலில் வசித்து வருகிறோம். 

கோவை : முடங்கிக் கிடக்கும் பசுமை வீடுகள் கட்டுமானப் பணிகள்: பரிதவிக்கும் பழங்குடியின மக்கள்..!

தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால் குழந்தைகளுடன் அந்த வீட்டில் வசிப்பது பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வீடுகள் உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சில வீடுகள் 90 சதவீத பணிகள் முடிந்தாலும் முழுமையடையாத காரணத்தினால் பயனாளிகளுக்கு வழங்கப்படாததால் உள்ளது. இதனால் கட்டப்பட்ட வீடுகளும் பராமரிப்பின்றி உள்ளது.

கோவை : முடங்கிக் கிடக்கும் பசுமை வீடுகள் கட்டுமானப் பணிகள்: பரிதவிக்கும் பழங்குடியின மக்கள்..!

இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ”கடந்த ஆட்சிக் காலத்தில் சோலார் உடன் கூடிய பசுமை வீடுகள் கட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடு கட்டும் பணிகள் துவங்கியது. ஆனால் நிதி இல்லை என கட்டுமான பணியை நிறுத்தியதால், இந்த சூழல் நிலவுகிறது. மாவட்ட நிர்வாகத்துடன் பேசி விரைவில் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Ponmudi: அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கு...  தேதி குறித்த நீதிமன்றம்... பதவி தப்புமா ?
அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கு... தேதி குறித்த நீதிமன்றம்... பதவி தப்புமா ?
Exclusive: ''பகலில் தூக்கம்; 5ஆவது முயற்சி''- யுபிஎஸ்சி தேர்வில் தர்மபுரி பையன் சிவச்சந்திரன் சாதித்தது எப்படி?
Exclusive: ''பகலில் தூக்கம்; 5ஆவது முயற்சி''- யுபிஎஸ்சி தேர்வில் தர்மபுரி பையன் சிவச்சந்திரன் சாதித்தது எப்படி?
TN Rain: இன்று இரவு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
TN Rain: இன்று இரவு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Puducherry Power Shutdown: மக்களே உஷார்... புதுச்சேரியில் நாளை எந்தெந்த பகுதியில் மின்தடை தெரியுமா?
Puducherry Power Shutdown: மக்களே உஷார்... புதுச்சேரியில் நாளை எந்தெந்த பகுதியில் மின்தடை தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashmitha Shri Vishnu | பெண்களிடம் பாலியல் சேட்டை!”கையில் சரக்கு.. CONDOM..” சிக்கிய தவெக நிர்வாகி!”நான் இப்படி தான் நடிப்பேன்” சிம்ரன் Vs ஜோதிகா?பற்றி எரியும் புது பஞ்சாயத்து | Simran Vs JyotikaAnnamalai: MP ஆகும் அண்ணாமலை இறங்கி வந்த சந்திரபாபு! பாஜக பக்கா ஸ்கெட்ச்! | BJP | Chandrababu Naidu”அவன கஷ்டப்படுத்தாதீங்க”ஸ்ரீயை மீட்ட லோகேஷ்..மருத்துவர்கள் சொல்வது என்ன? | Sri Bluetick | Lokesh Kangaraj

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ponmudi: அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கு...  தேதி குறித்த நீதிமன்றம்... பதவி தப்புமா ?
அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கு... தேதி குறித்த நீதிமன்றம்... பதவி தப்புமா ?
Exclusive: ''பகலில் தூக்கம்; 5ஆவது முயற்சி''- யுபிஎஸ்சி தேர்வில் தர்மபுரி பையன் சிவச்சந்திரன் சாதித்தது எப்படி?
Exclusive: ''பகலில் தூக்கம்; 5ஆவது முயற்சி''- யுபிஎஸ்சி தேர்வில் தர்மபுரி பையன் சிவச்சந்திரன் சாதித்தது எப்படி?
TN Rain: இன்று இரவு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
TN Rain: இன்று இரவு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Puducherry Power Shutdown: மக்களே உஷார்... புதுச்சேரியில் நாளை எந்தெந்த பகுதியில் மின்தடை தெரியுமா?
Puducherry Power Shutdown: மக்களே உஷார்... புதுச்சேரியில் நாளை எந்தெந்த பகுதியில் மின்தடை தெரியுமா?
அஞ்சானில் விழுந்த அடி.. இன்னும் எந்திரிக்காத சூர்யா..! கரைசேர்க்குமா ரெட்ரோ?
அஞ்சானில் விழுந்த அடி.. இன்னும் எந்திரிக்காத சூர்யா..! கரைசேர்க்குமா ரெட்ரோ?
2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்: தமிழ்நாடு அரசுடன் இணக்கமா..அதுதான் இல்லை?
2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்: தமிழ்நாடு அரசுடன் இணக்கமா..அதுதான் இல்லை?
UPSC Topper: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; முதலிடம் பிடித்த சக்தி துபே- யார் இந்தப் பெண்?
UPSC Topper: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; முதலிடம் பிடித்த சக்தி துபே- யார் இந்தப் பெண்?
Annamalai: எம்.பி. ஆகும் அண்ணாமலை? இறங்கி வந்த சந்திரபாபு நாயுடு- பாஜக பக்கா ஸ்கெட்ச்!
Annamalai: எம்.பி. ஆகும் அண்ணாமலை? இறங்கி வந்த சந்திரபாபு நாயுடு- பாஜக பக்கா ஸ்கெட்ச்!
Embed widget