World Tallest Murugan Statue: முருக பக்தர்களே குட் நியூஸ்... உலகின் மிக உயரமான முருகன் சிலை... எங்கு அமையுள்ளது தெரியுமா?
Tallest Murugan Statue in World: 160 அடி உயரத்துக்கு கல்லால் ஆன முருகன் சிலை அமைக்கப்பட உள்ளதாகவும், விரைவில் வல்லுனர் குழு ஆய்வு செய்ய உள்ளதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

கோவை மருதமலை திருக்கோவிலில் வருகின்ற பிப்ரவரி 4 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மருதமலை கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் இந்து சமயம் மற்றும் அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, இந்த ஆட்சி ஏற்பட்டவுடன், குறிப்பாக திருக்கோவில்களில், 2400 கோவில்களில் இதுவரை குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. அதில் அதிகமாக தமிழ் கடவுள் ஆன முருகன் கோவில்கள் அதிகமாக குடமுழுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதில், பழனி முருகன் திருக்கோவில் தமிழ் மொழியில் திருக்குடமுழுக்கு நடைபெற்று இருக்கிறது. அதேபோல இந்த ஆட்சி ஏற்பட்டவுடன் 60 வயது கடந்து 70 வயதுக்குள்ளான மூத்த குடிமக்களை, ஆறுபடை முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்ல இருப்பிட வசதி, போக்குவரத்து வசதியோடு, ஏற்படுத்தி தந்த அரசு இந்த அரசு என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் இதுவரையில் 1062 பேர் பயனடைந்து இருக்கின்றார்கள். தொடர்ந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும். முருகன் திருக்கோவில்களில் இதுவரை ஏழு கோவில்கள் பெருந்திட்ட வரைவுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருச்செந்தூர் 400 கோடி ரூபாய் அளவுக்கு அங்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் hcl நிறுவனம் 200 கோடி ரூபாய் உபயதாரராக உள்ளார்கள். பங்கு தற்போது 60% பணிகள் நிறைவு பெற்றுள்ளது. திருக்கோவில் சார்பில் 23 பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது வரை 16 பணிகள் முடிவடைந்து இருக்கிறது.
அதேபோல் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பழனியில், முதற் பெருந்திட்ட வரைவு 99 கோடி ரூபாய் செலவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டாவது பிறந்துட்ட வரைவு, 58 ஏக்கர் சுமார் 50 கோடி ரூபாய் செலவில் நில ஆர்ஜிதம் செய்கிற பணிகள் தொடங்கி இருக்கிறது. 108 கோடி ரூபாய் அளவுக்கு அதற்கு பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. அங்கும் இந்த ஆண்டுக்கு உள்ளாக பணிகள் துவங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்ததாக திருத்தணி திருக்கோவிலை பார்த்தால், 183 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்ட வரைவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 83 கோடி ரூபாய் அளவுக்கு தற்போது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 100 கோடி ரூபாய் அளவுக்கான பணிகள் அடுத்த மாதம் இறுதிக்குள் தொடங்கி வைக்கப்படும். அதேபோல் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், முதற்கட்டமாக சுமார் ஆறரை கோடி ரூபாய் செலவில், நடைபெற்ற பணிகளுக்கு ஏப்ரல் மாதம் குடமுழுக்கு நடைபெற உள்ளது. அதோடு இரண்டாவது கட்டப் பணியாக 11 கோடி ரூபாய் செலவில் அன்னதான கூடம், முடி காணிக்கை மண்டபம் போன்றவை ஏற்படுத்தப்பட உள்ளது. மூன்றாவது கட்டமாக 23 கோடி மதிப்பீட்டில், பெரும் திட்டவளாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி திருக்கோவிலில், செவ்வாய்க்கிழமைகளில் 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் எண்ணிக்கையில் பக்தர்கள் வருவதால், 16 கோடி ரூபாய் செலவில், பெருந்திட்ட வரைவில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. அதேபோல் திருச்சி வயலூர் முருகன் திருக்கோவிலில் வருகிற 19-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. அங்கும் பெருந்துட்ட வரைவு பணிகள் 30 கோடி ரூபாய் செலவில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. அதேபோல ஊட்டியில் அமைந்திருக்க கூடிய காந்தல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 16 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 872 கோடி ரூபாய் செலவில் இந்த கோவில்களில் பெருந்திட்ட வரைவு பணிகள் நடைபெற உள்ளது.
தமிழ் கடவுளுக்கு பெருமை சேர்க்கிற வகையில், அனைத்து உலக முருகர் பக்தர்கள் மாநாடு கண்ட இந்த திராவிட மாடல் ஆட்சியில், எங்கெல்லாம் முருகனுக்கு திருக்கோவில்கள் அமைந்துள்ளதோ, அங்கெல்லாம் இனி கால காலங்களுக்கு , நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவதை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்காக தான் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வயது முதிர்ந்தவர்கள், சற்று நோய்வாய் பட்டவர்கள், முருகனை தரிசிப்பதற்காக மருதமலையில் லிப்ட் வசதி ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இரண்டு அடுக்குகளைக் கொண்ட மின்தூக்கி அமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஒரு அடுக்கின் வேலை மார்ச் மாதத்திற்குள முடிவடையும், ஏப்ரல் மாதத்திற்குள் மற்றொரு அடுக்கு முடிவடைய உள்ளது. அதோடு மட்டுமல்லாமல், மருதமலை முருகன் திருக்கோவிலுக்கு, 160 அடி உயரத்தில் கல்லினால் ஆன முருகரை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கு உண்டான ஆய்வில் எங்கள் துறையின் செயலாளர் சந்திரமோகன், கோவை மாவட்ட ஆட்சியர், அறநிலை துறையின் கூடுதல் ஆணையளர் சுகுமார், மருதமலை திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர், இணை ஆணையாளர், அறங்காவலர் குழு உறுப்பினர்களும், அந்த சிலை அமைக்கப்படக்கூடிய இடத்தில் ஒன்றாக ஆய்வு செய்தோம். இந்த ஆய்வுப் பணிகளை 2, 3 Consultant களிடம் கொடுத்து சாத்திய கூறுகளை ஆராய ஒப்படைத்துள்ளோம். அது இறுதி பெற்றவுடன், முதலமைச்சரின் அனுமதியோடு தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமைக்கும் பெருமை சேர்க்கிற வகையில் ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்ட சிலை நிறுவுவதற்கு உண்டான ஏற்பாடுகளை தொடர்வோம் என்றார்.
பட்டீஸ்வரர் கோவில் ஆக்கிரமிப்புகள் தொடர்பான கேள்விக்கு, வருகின்ற 31 ஆம் தேதி ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றுவதற்கு, காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டு இருக்கிறோம். மாவட்ட ஆட்சியாளர் காவல் ஆணையாளர் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். நிச்சயமாக 31ஆம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியானது தொடங்கப்படும்.
வெள்ளிங்கிரி மலையேற்றம் தொடர்பான கேள்விக்கு, வெள்ளியங்கிரி மலையை பொறுத்தவரையில், தமிழக முதல்வர் கூட வெகுவிரைவில் அறங்காவலர்களை நியமிக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார். அந்த அறங்காவலர்கள் குழு நல்ல முறையில் பணி செய்வார்கள். வெள்ளியங்கிரி மலையில் 21 கோடி ரூபாய் செலவில் வெவ்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அந்தப் பணிகளும் 60% அளவிற்கு முடிவு பெற்றுள்ளது. வெள்ளிங்கிரி மலை ஏறும் பக்தர்களுக்கு என்னென்ன வசதிகள் தேவைப்படுகிறது அவை அனைத்தையும் நிறைவேற்றி தருவதற்கு தான், நானே நடையாக சென்று வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து வந்தேன். அங்கு தேவைப்படுகின்ற அனைத்து தேவைகளும் படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும். அங்கு மருத்துவ முகாம்களை அதிகரிக்க கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தால் நிச்சயமாக அதிகரித்து தருவோம். மலை ஏறுகிறவர்களுக்கு புதிய பரிசோதனை செய்வதற்கான சிறப்பு பரிசோதனை முகாம்கள் அமைப்பதற்கு, மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசித்து செயல் படுத்துவோம்.
பழனி பாதயாத்திரை செல்பவர்களுக்கு, அன்னதான கட்டுப்பாடு இருக்கிறதே என செய்தியாளர் கேள்விக்கு, பக்தர்களுக்கு மனமுவந்து, நேர்த்திக்கடனாக இருக்கலாம் அல்லது செல்வந்தர்களாக இருக்கலாம். அவர்கள் உதவி செய்வதை அன்னதானம் வழங்குவதை இந்த அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ளும். 1200 கோடி ரூபாய் அளவுக்கு உபயதாரர் நிதி திருக்கோவில்களுக்கு வந்திருக்கிறது. 11 திருக்கோவில்களில் திமுக ஆட்சிக்கு பிறகு முழுநேர அன்னதானம் வழங்கப்படுகிறது. 17 திருக்கோவில்களில் ஒருநேரம் அன்னதானத்தை விரிவுபடுத்தி இருக்கிறோம். இப்படி இருக்கும்போது அன்னதானத்தை தடை செய்யும் நோக்கம் எங்களுக்கு இல்லை, அன்னதானம் வழங்கும்போது ஏற்படுகிற சாதகபாதக, அசவுகரியம், உடல் நலக்குறைவு ஆகியவை மனதில் கொண்டு. அன்னதானம் வழங்குவர்களிடம் பேசி ஒரு சுமூகமான முடிவை ஏற்படுத்த, கலந்த ஆலோசனை செய்யப்பட்டுள்ளது என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

