மேலும் அறிய

Rahul Gandhi : "I love Tribals" : நீலகிரியில் தோடர் பாரம்பரிய உடையணிந்து நடனமாடிய ராகுல் காந்தி

முத்துநாடுமந்து என்ற தோடர் பழங்குடியின கிராமத்திற்கு ராகுல் காந்தி வருகை தந்தார். அவருக்கு தோடர் பழங்குடிகள் தங்களது பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி இன்று முதல் முறையாக வயநாடு தொகுதிக்கு செல்ல உள்ளார். இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு ராகுல்காந்தி வருகை தந்தார்.

அப்போது கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கார் மூலம் சாலை மார்க்கமாக நீலகிரிக்கு ராகுல் காந்தி வருகை தந்தார். இதனிடையே கோத்தகிரி வழியாக வந்த ராகுல் காந்தி அரவேனு பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ‘வருங்கால பிரதமர் ராகுல்காந்தி’ என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் முழக்கமிட்டனர். மேலும் ராகுல் காந்தியுடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

Rahul Gandhi :

எல்லநள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மா உடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். பின்னர் அதேபகுதியில் சாக்லேட்கள் தயாரிக்கப்படும் முறையினை ராகுல் காந்தி பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து முத்துநாடுமந்து என்ற தோடர் பழங்குடியின கிராமத்திற்கு ராகுல் காந்தி வருகை தந்தார். அவருக்கு தோடர் பழங்குடிகள் தங்களது பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். அப்போது பழங்குடியின மக்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். பின்னர் தேக்சீ அம்மன் முன்போ கோவிலை ராகுல் காந்தி பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த மக்கள் அக்கோவிலைப் பற்றி அவருக்கு எடுத்துரைத்தனர்.

Rahul Gandhi :

பின்னர் இளைஞர்கள் தங்களது பலத்தை காட்டும் வகையில் இளவட்டக்கல் தூக்குவதையும், பழங்கால முறைப்படி நெருப்பு மூட்டும் முறையையும் ராகுல் காந்தி பார்வையிட்டார். தோடர்களின் பாரம்பரிய உடையணிந்து ஆண்கள் மற்றும் பெண்கள் உடன் இணைந்து ராகுல் காந்தி நடனமாடினார். அப்போது ஒரு பெண் குழந்தையை ராகுல்காந்தி தூக்கி கொஞ்சியபடி முத்தமிட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “ஐ லவ் டிரைபல்ஸ்” என்றார். இதையடுத்து கூடலூர் வழியாக கேரள மாநிலத்திற்குள் உள்ள வயநாடுவிற்கு ராகுல் காந்தி சென்றார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். இதையொட்டி கோவை மற்றும் நீலகிரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பரப்புரையின்போது மோடி எனும் சமூகப் பெயரை இழிவுபடுத்தும் விதமாக, ராகுல் காந்தி பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை, உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனால், 136 நாட்களுக்குப் பிறகு மீண்டும் எம்.பி. ஆனார் ராகுல் காந்தி. முன்னதாக அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் என இருந்த தனது டிவிட்டர் பயோவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என மாற்றினார். இந்நிலையில், அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டு உள்ளதால், தனது டிவிட்டர் பயோவில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் என குறிப்பிட்டார். பின்னர் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லாத தீர்மானம் குறித்து மக்களவையில் ராகுல் காந்தி உரையாற்றினார். இதையடுத்து முதல் முறையாக ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Embed widget