மேலும் அறிய

ஆளுநர்கள் மூலம் ஆட்சியை கலைக்க பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

'எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் ஆட்சியில் தலையிடுகின்றனர். இந்த ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா? ஆளுநர்களை மக்களால் அப்பதவியில் அமர வைத்தார்கள்? இல்லை.”

இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கேரள மாநில சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, ராகுல் காந்தி இன்று நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிக்கு வருகை தந்தார். கோழிப்பாலம் பகுதியில் இருந்து சுங்கம் பகுதி வரை 6 கி.மீ. தூரம் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டார். பின்னர் நடந்த  பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”என் சகோதரி ஒரு வீட்டை சிம்லாவில் கட்டி இருக்கின்றார். அது பற்றி அடிக்கடி பேசுவார். இன்று அவரிடம் கூடலூர் வீடு கட்டுவதற்கு அழகான இடம் என்று சொன்னேன். கூடலூர் பலவகைகளில் அழகான இடம். அழகான மலைகள், கால சூழலும் இங்கு கூடுதல் அழகை கொடுக்கின்றன. இந்த ஊர் மூன்று மொழிகள், மூன்று  கலாச்சாரங்கள், மூன்று பண்பாட்டை இணைக்கும் இடமாக இருக்கின்றது” எனத் தெரிவித்தார்.

ஆளுநர்கள் மூலம் ஆட்சியை கலைக்க பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராகுல்காந்தி உரையாற்றும் போது பள்ளிவாசலில் தொழுகை நடந்ததால், சிறிது நேரம் ராகுல்காந்தி பேச்சை நிறுத்தினார். பின்னர் பேசிய அவர், ”தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகள் இங்கு இணைந்து இருக்கின்றது. 3 மொழிகளும் மதிக்கப்படும் இடமாக இருக்கின்றது. வெவ்வேறு மதங்கள் இணைந்து, அனைவரும் பாசத்துடன் இருக்கின்றனர். பாரத்ஜோடோ யாத்திரை ஏதற்காக நடத்தப்படுகின்றதோ அத்தனையும் இங்கு இருக்கின்றது. ஒற்றுமை பற்றியும் ஒன்றாக இணைந்து இருக்க வேண்டும் என்பதையும் உங்களிடம் இருந்து பிறருக்கு கொண்டு செல்கின்றோம். அனைவரிடமும் மனிதாபிமானம் இருப்பதை உணர முடிகின்றது. 

பல்வேறு மொழிகள், பல்வேறு மதங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கின்றனர். இங்கு யாரும் கோவமோ, வெறுப்போ காட்டவில்லை. யாரும் யாரையும் அவமதிப்பதை பார்க்கவில்லை. இந்த இடத்தில் தமிழ் பேசக்கூடாது என்றோ, மலையாளம், ஆங்கிலம் பேசக்கூடாது என்றோ சொல்வதில்லை. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் ஆட்சியில் தலையிடுகின்றனர். இந்த ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா? ஆளுநர்களை மக்களால் அப்பதவியில் அமர வைத்தார்கள்? இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஆளுநர்கள் மூலம் கலைக்க பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் முயல்கின்றனர். அதற்கு என்ன தகுதி இருக்கின்றது? 

ஆளுநர்கள் மூலம் ஆட்சியை கலைக்க பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஜி.எஸ்.டியில் மாநில அரசுகள் பங்குதாரர்கள். உரிய நேரத்தில் ஜி.எஸ்.டி தொகை மாநிலங்களுக்கு தர வேண்டும். ஓரே மொழி, ஒரே நாடு என்று பா.ஜ.க சொல்கின்றது. நமக்கு தேவை ஒற்றுமை. இங்கே ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை சிலர்  விரும்பவில்லை. ஒவ்வொரு மொழியும், பண்பாடும் மதிக்கப்பட வேண்டும், காப்பாற்றப்பட வேண்டும். சமீபகாலமாக நாட்டின் நிலையை கவனத்தால், பா.ஜ.க செய்யும் அனைத்தும் தெரியும். இந்தியா மிகப்பெரிய அளவில் வேலை இல்லாமையை சந்தித்து வருகின்றது விலைவாசி உயர்ந்துள்ளது விவசயிகள், தொழில் முனைவோர் பாதிக்கப்படுகின்றனர்.

இன்று சிறுகுறுதொழில் முனைவோரை சந்தித்தேன். இந்த பகுதியில் சிறப்பான தொழில்முனைவோராக செயல்படுபவர்கள் அவர்கள். எலக்ட்ரிக் கார்,ஸ்கூட்டர் போன்றவற்றை செய்கின்றனர், மருந்து வகைகளை செய்கின்றனர். இவர்களை போன்றவர்கள் தான் இந்தியாவில் ஏராளமான வேலை வாய்ப்பை ஏற்படுத்துகின்றனர். ஒவ்வொரு தொழில் முனைவோரும் ஜிஎஸ்டி பேரழிவை எற்படுத்தி இருப்பதாக சொல்கின்றனர். பணமதிப்பு இழப்பு நடவடிக்கையும்  பேரிடரை ஏற்படுத்தி இருப்பதாக சொல்கின்றனர்.பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி போன்றவை மக்களின் சட்டையில் இருந்து  பணத்தை எடுக்கின்றன. சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருக்கின்றது. இதற்கு காரணம் தவறான பொருளாதார நடவடிக்கை. நமது பையில் இருக்கும் பணத்தை எடுத்து பிறருக்கு கொடுக்கிற செயல் அது. ஏற்றத்தாழ்வு உள்ள இந்தியாவை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏழை மக்கள் அதிகமாக பணம் செலவழிக்க கூடிய இந்தியாவாக இருக்கிறது. இந்த செய்திகள் பாரத்ஜோடா பயணத்தில் சொல்லப்படுகின்றது” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Ather Budget Scooter EL01: ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
Tamilnadu Roundup: பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
America Vs Syria: ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
Embed widget