மேலும் அறிய

வீணாகும் தேங்காய் நீரில் சர்க்கரை நோய் புண்ணிற்கு மருந்து கண்டுபிடிப்பு; பொள்ளாச்சி இளைஞருக்கு ஜனாதிபதி விருது

தேங்காய் தண்ணீர், தேங்காய் எண்ணையில் உள்ள லாரிக் அமிலம் போன்வற்றை பயன்படுத்தி மருந்து கண்டுபிடித்து நீண்ட நாட்களாக ஆறாத சர்க்கரை நோய் புண், தீக்காயம் போன்றவை சரியாகும் வகையில் மருந்து தயாரித்துள்ளார்

உலக அளவில் இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. இந்திய அளவில் கர்நாடகம், கேரளா, தமிழகம், ஆந்திரா ஆகிய பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகமாக உள்ளது. இந்தியா முழுவதும் 18.95 லட்சம் ஹெக்டேர் தென்னை சாகுபடி பரப்பு உள்ளது. இதில் 16 ஆயிரத்து 940 மில்லியன் தேங்காய்  உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 4 லட்சம் ஹெக்டேரில் 12 கோடி தென்னை மரங்கள் உள்ளன. இதில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 36 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் 1.5 கோடி தென்னை மரங்கள் உள்ளன. கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உற்பத்தியாகும் தேங்காய்கள் பெரும்பாலும் கொப்பரையாக மாற்றப்படுகிறது.

கொப்பரையாக தேங்காய் மாற்றப்படும் இடங்களில் உடைக்கப்படும் தேங்காய்களில் இருந்து தேங்காயின் தண்ணீர் பயன்பாடு இன்றி வீணாகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 20 கோடி லிட்டர் தேங்காய் தண்ணீர் வீணாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இப்படி வீணாகும் தேங்காய் தண்ணீரில் இருந்து பொள்ளாச்சியை சேர்ந்த இளைஞர் விவேகானந்தன் சர்க்கரை நோய் புண்களை குணமாக்கும் மருந்தை கண்டறிந்துள்ளார்.

வீணாகும் தேங்காய் நீரில் சர்க்கரை நோய் புண்ணிற்கு மருந்து கண்டுபிடிப்பு; பொள்ளாச்சி இளைஞருக்கு ஜனாதிபதி விருது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்த். இவர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்யும் குடும்பத்தை சார்ந்தவர். இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை உதவியுடன் கடந்த 2020ம் ஆண்டில் இருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தேங்காய் தண்ணீர், தேங்காய் எண்ணையில் உள்ள லாரிக் அமிலம் போன்வற்றை பயன்படுத்தி மருந்து கண்டுபிடித்து நீண்ட நாட்களாக ஆறாத சர்க்கரை நோய் புண், தீக்காயம் போன்றவை சரியாகும் வகையில் மருந்து தயாரித்துள்ளார். இதை சோதனை செய்து உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் இந்த ஆராய்ச்சியை யாரும் இதுவரை செய்யவில்லை. அதனால், இந்த கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், ஆராய்ச்சியை மேம்படுத்தவும் ரூ.80 லட்சம் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை நிதி ஒதுக்கியுள்ளது. மேலும், இந்த மருந்தை தயாரிக்க பொள்ளாச்சியில் தொழிற்சாலை துவங்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருந்துக்கான காப்புரிமையையும் வழங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் மருந்து பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் குறைந்த விலையில் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. நாள்பட்ட தீக்காயம், சர்க்கரை நோய் புண்கள் குணமாக பெரும்பாலான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுவரும் நிலையில் உள்நாட்டிலேயே அதுவும் பொள்ளாச்சியிலேயே மருந்து தயாரிக்கப்பட உள்ளது. இதனிடையே இந்த ஆராய்ச்சியை பாராட்டி குடியரசுத் தலைவர் விவேகானந்தனுக்கு சமீபத்தில் விருதும் வழங்கி கெளரவித்துள்ளார்.

வீணாகும் தேங்காய் நீரில் சர்க்கரை நோய் புண்ணிற்கு மருந்து கண்டுபிடிப்பு; பொள்ளாச்சி இளைஞருக்கு ஜனாதிபதி விருது

இதுகுறித்து விவேகானந்த் கூறுகையில், ”கொங்கு மண்டலத்தில் உற்பத்தியாகும் 4500 கோடி தேங்காய்களில் இருந்து பெரும்பாலும் கொப்பரைகளாக மாற்றப்படும்போது, அதில் இருந்து கிடைக்கும் மருத்துவ குணம் வாய்ந்த தேங்காய் தண்ணீர் வீணாக்கப்படுகிறது. தேங்காய் எண்ணைய் மருத்துவ குணம் வாய்ந்தது என்பதை நிரூபிக்கவும், அதில் இருந்து கிடைக்கும் லாரிக் அமிலத்தையும், தேங்காய் தண்ணீரையும் மூலப்பொருளாக கொண்டு சர்க்கரைநோய் நாட்பட்ட புண்கள் குணமாக்க மருந்து கண்டறியும் ஆராய்ச்சில் ஈடுபட்டேன். அதில் வெற்றி கிடைத்தது.

ஆராய்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பாக ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு மருந்தை அங்கீகரித்துள்ளது. மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை பொள்ளாச்சியில் கட்டப்பட்டு மருந்து தயாரிக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது. விரைவில் மருந்து ஏழை மக்களும் பயன்பெறும் வகையில் குறைந்த விலைக்கு வழங்க உள்ளோம். புண்ணின் மேற்பரப்பில் இதை மருந்துக்கட்டாக பயன்படுத்த வேண்டும். இந்த ஆராய்ச்சிக்காக ஜனாதிபதியிடம் விருது வாங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget