மேலும் அறிய

வேலியே பயிரை மேய்ந்த கதை.. திருடனிடமே பணத்தை திருடிய காவலர் - சிக்கியது எப்படி?

ஏ.டி.எம் டெபிட் கார்டு மற்றும் பாஸ்வோர்டு ஆகியவற்றை காவலr ரஞ்சித் என்பவர் மிரட்டி வாங்கியுள்ளார். பின்னர் அதனைப் பயன்படுத்தி ஆனந்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 4 லட்ச ரூபாய் பணத்தை ரஞ்சித் எடுத்துள்ளார்.

திருப்பூரில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கைதியின் டெபிட் கார்டு மூலம் 4 லட்ச ரூபாய் பணத்தை திருடிய காவலரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பகுதி சின்னகானூர். இப்பகுதியில் உள்ள இருவேறு இரும்பு உருக்காலைகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காவலரை தாக்கி விட்டு இரும்பு மற்றும் செம்பு திருடு போனது. இது தொடர்பாக அந்த உருக்காலைகளின் உரிமையாளர்கள் சேவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் இரும்பு திருடிய 8 பேரை சேவூர் காவல் துறையினர் கைது செய்தனர். அதில் திருடப்பட்ட இரும்பை வாங்கிய கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த இரும்பு வியாபாரி ஆனந்த் என்பவரும் அடக்கம். ஆனந்த் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே ஆனந்த் சிறை செல்வதற்கு முன்பாக அவரது ஏ.டி.எம் டெபிட் கார்டு மற்றும் பாஸ்வோர்டு ஆகியவற்றை சேவூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய ரஞ்சித் என்பவர் மிரட்டி வாங்கியுள்ளார். பின்னர் அதனைப் பயன்படுத்தி ஆனந்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 4 லட்ச ரூபாய் பணத்தை ரஞ்சித் எடுத்துள்ளார்.

இதனிடையே அண்மையில் ஆனந்த் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஆனந்த் தனது வங்கிக் கணக்கை சரி பார்த்துள்ளார். அப்போது தனது வங்கிக் கணக்கில் இருந்த 4 லட்ச ரூபாய் பணம் குறைந்திருப்பது தெரியவந்தது. அதுகுறித்து வங்கியில் விசாரித்த போது தனது டெபிட் கார்டை பயன்படுத்தி தான் பணம் எடுத்திருப்பதும், தன்னை மிரட்டிப் பெற்ற ஏடிஎம் டெபிட் கார்டு மூலம் காவலர் ரஞ்சித் 4 லட்ச ரூபாய் பணத்தை எடுத்து இருப்பதும் தெரியவந்தது. காவலரே பணத்தை திருடியிருப்பதை அறிந்து, ஆனந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார்.


வேலியே பயிரை மேய்ந்த கதை.. திருடனிடமே பணத்தை திருடிய காவலர் - சிக்கியது எப்படி?

இதையடுத்து பணத்தை திருடிய காவலர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆனந்த் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. சேவூர் காவல் நிலையத்தில் இருந்து ரஞ்சித், பணியிட மாறுதலில் அவிநாசி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் விசாரணையில் காவலர் ரஞ்சித் பணத்தை எடுத்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதனைத் தொடர்ந்து காவலர் ரஞ்சித்தினை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செஷாங் சிங் உத்தரவிட்டுள்ளார். திருடனிடம் காவலரே திருடி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

கோவை மக்களுக்கு குட் நியூஸ்! சிங்கநல்லூரில் ரூ.170 கோடியில் மேம்பாலம் – அடுத்த மாதம் தொடங்கும் பணிகள்?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! சிங்கநல்லூரில் ரூ.170 கோடியில் மேம்பாலம் – தொடங்கும் பணிகள்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
coimbatore power cut: கோவையில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் கரண் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் கரண் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (12-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Embed widget