மேலும் அறிய

லண்டனில் கொல்லப்பட்ட மகன்! உடலை அனுப்ப பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை - உதவுமா தமிழக அரசு?

காரில் வந்த மர்ம நபர்கள் விக்னேஷ் மீது மோதி விட்டு அவரை கொடூரமாக தாக்கிச் தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த விக்னேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை மருதமலை அருகே உள்ள ஐ.ஓ.பி காலணியை சேர்ந்தவர் பட்டாபிராமன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது மகன் விக்னேஷ் (36). கடந்த 14 ஆண்டுகளாக கத்தார் நாட்டில் தனியார் உணவக மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் லண்டன் நாட்டில் ரீடிங் என்ற பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பணியில் சேர்ந்தார்.

லண்டனில் தமிழர் உயிரிழப்பு:

இந்நிலையில் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்துச் செல்ல தயாராக இருந்த நிலையில், கடந்த பிப்14 ஆம் தேதி தான் பணியாற்றும் ஹோட்டலில் இருந்து சைக்கிளில் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் விக்னேஷ் மீது மோதி விட்டு அவரை கொடூரமாக தாக்கிச் தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த விக்னேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கண்ணீர் மல்க பெற்றோர்கள் கோரிக்கை:

இந்த சம்பவம் லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக லண்டன் காவல் துறையினர் 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த விக்னேஷ் உடலை இந்தியா எடுத்து வர தந்தை பட்டாபிராமன் சென்னையில் உள்ள அயலக நலத்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அங்குள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் விசாரனைக்கு பின் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால், தொடர்ந்து காலதாமதம் ஆகி வருவதால் விக்னேஷ் உடலை விரைந்து இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர் கூறும் போது, ”கடந்த 14ல், மகன் விக்னேஷ் விபத்தில் இருந்ததாக தகவல் கூறினார்கள். இரண்டு நாட்கள் கழித்து கொலை செய்துவிட்டதாக கூறினார்கள். கொலை செய்யும் அளவிற்கு அவருக்கு எதிரிகள் இல்லை. மகன் இறந்து 10 நாட்கள் ஆகியும், லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் முறையான பதில் கூறவில்லை. இறந்த மகனின் இறுதி மரியாதையை முறைப்படி செய்ய வேண்டும். தமிழக அரசும், தமிழக முதல்வர் தலையிட்டு மகனின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி

Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!

ABP Premium

வீடியோ

செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி

வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில்  பகல் பத்து நிகழ்ச்சி

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?

IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?

Embed widget