மேலும் அறிய

O Panneerselvam: “பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை கொடுத்திருப்பதால் மீண்டும் பிரதமராக வர வேண்டும்” - ஓ.பன்னீர்செல்வம்

கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறார்கள். எனவே மீண்டும் பிரதமராக மோடி தான் வர வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்.

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜேசிடி பிரபாகர், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ஜனவரி 19 ம் தேதி  உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு வழக்கு வருகின்றது. அந்த வழக்கில் பொதுக்குழு தீர்மானம் தொடர்பான முடிவுகள் கிடைக்கும். ஈரோட்டில் இரட்டை இலை தற்காலிகமாக தான் கொடுக்கப்பட்டது. அவர்கள் என் மீது என்ன குற்றம் சொல்கின்றனர்? என்னை நீக்குவதற்கு என்ன காரணம் சொல்கின்றனர்?

யாருக்கு நான் நம்பிக்கை துரோகம் செய்தேன் என்பதை அவர்களால் சொல்ல முடியுமா? இப்பொழுதும் அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்கின்றேன். ஒன்றுபட்டால்தான் வெற்றி அடையமுடியும். இது புரிய வேண்டியவர்களுக்கு புரியவேண்டும். அவர்கள் இதை காதில் வாங்க மாட்டேன் என்கின்றனர். மக்களின் அபிமானம், தொண்டர்களின் அபிமானத்தை பெற வேண்டும் என சொல்கிறேன். அதை கேட்க மாட்டேன் என்கின்றனர். நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு செயல்படுவதாக சொல்பவன் முட்டாள்” எனத் தெரிவித்தார். அப்போது இடைமறித்த வைத்திலிங்கம், ”அதிமுக நிர்வாகிகள் மீது எத்தனை வழக்கு இருக்கின்றது. கொடநாடு கொலை, கொள்ளை உட்பட பல வழக்குகள் இருக்கிறது. அதில் எந்த நடவடிக்கையும் இல்லை. திமுகவும் அதிமுகவும் இணைந்து செயல்படுகின்றன என்பது பொதுமக்கள் கருத்து.

O Panneerselvam: “பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை கொடுத்திருப்பதால் மீண்டும் பிரதமராக வர வேண்டும்” - ஓ.பன்னீர்செல்வம்

தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், “சட்டமன்ற விதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற விதி மட்டும்தான் இருக்கிறது. எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்பது இல்லை. அதை சபாநாயாகர் நினைத்தால் கொடுக்கலாம். அவர் வேண்டாம் என்று நினைத்தால் கொடுக்க தேவையில்லை. அது சபாநாயகரின் தனி அதிகாரம். அது சட்டமன்ற விதிகளில் இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுடைய நிலைப்பாடு, கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறார்கள். எனவே மீண்டும் பிரதமராக மோடி தான் வர வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். அதிமுக ஆட்சியின் போது சில தவறுகள் உள்ளே நடந்தது. இப்போது ஆட்சியில் யார் இருக்கின்றனர்? ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கொடநாடு குற்றவாளிகளை கண்டுபிடிப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது சொன்னார்கள்,  அதில் ஆறு கொலைகள் நடந்துள்ளது. ஒன்றும் செய்யவில்லை.

சில அரசியல் ரகசியங்கள் உண்மையில் இருக்கிறது. அதை வெளியில் சொல்ல முடியுமா? அதிமுக நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் அதை நீக்க யாருக்கு அதிகாரம் இருக்கிறது? அந்த சேரில் போய் உட்காரலாமா? சின்னம்மாவிற்கு பொதுச் செயலாளர் பதவி கொடுக்கும் போது, நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா என்ற தீர்மானம் எதுவும் போடவில்லை. திமுக ஆட்சி குறித்து தினந்தோறும் அறிக்கைகள் கொடுத்து வருகிறேன். புயல், வெள்ளம் வந்தால் அதில் சிறப்பாக செயல்படுவதில்லை. தோற்றுப் போய் இருக்கின்றனர் என்று சொல்லி இருக்கின்றேன். அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமி இனி மேலே வரவே முடியாது. பாரதிய ஜனதா கட்சியுடன் உறவு சீராக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
IPL RCB vs KKR: டாஸ் வென்றார் ரஜத் படிதார்! பெங்களூருக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்குமா கொல்கத்தா?
IPL RCB vs KKR: டாஸ் வென்றார் ரஜத் படிதார்! பெங்களூருக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்குமா கொல்கத்தா?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
Fact Check: சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் காணொளி.. ஆனா, இது அது இல்ல!
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் காணொளி.. ஆனா, இது அது இல்ல!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
IPL RCB vs KKR: டாஸ் வென்றார் ரஜத் படிதார்! பெங்களூருக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்குமா கொல்கத்தா?
IPL RCB vs KKR: டாஸ் வென்றார் ரஜத் படிதார்! பெங்களூருக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்குமா கொல்கத்தா?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
Fact Check: சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் காணொளி.. ஆனா, இது அது இல்ல!
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் காணொளி.. ஆனா, இது அது இல்ல!
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Italy Teacher Suspended: என்னமா.. இப்படி பண்ணிட்டியே மா.? ஆபாச மாடலாகவும் பணியாற்றிய பள்ளி ஆசிரியை.. எங்கு தெரியுமா.?
என்னமா.. இப்படி பண்ணிட்டியே மா.? ஆபாச மாடலாகவும் பணியாற்றிய பள்ளி ஆசிரியை.. எங்கு தெரியுமா.?
Embed widget