மேலும் அறிய

நீலகிரி மலை இரயில் போக்குவரத்து 6 ம் தேதி துவக்கம் – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

கொரோனா பரவலுக்கு முன்பு இருந்த கட்டணமே தொடரும் எனவும், முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும் எனவும் இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தென்னிந்தியாவில் உள்ள ஒரே மலை இரயில், நீலகிரி மலை இரயில். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் வரை 46.61 கிலோ மீட்டர் தூரம் மலை இரயிலில் பயணிக்க முடியும். மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நீராவி இன்ஜின் மூலம் இரயில் இயக்கப்படுகிறது. குன்னூர் – உதகை இடையே டீசல் இன்ஜினில் இயக்கப்படுகிறது. கடந்த 2005 ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இந்த மலை இரயில், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. உள்நாட்டு பயணிகளை மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளையும் நீலகிரி மலை இரயில் கவர்ந்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரி மலை இரயிலில் பயணித்து வருகின்றனர்.

நீலகிரி மலை இரயில் போக்குவரத்து 6 ம் தேதி துவக்கம் – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நீலகிரி மலை இரயில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மலை இரயில் போக்குவரத்து வருகின்ற 6 ம் தேதி முதல் துவங்கும் என இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் 4 மாதங்களுக்குப் பிறகு மலை இரயில்  தனது பயணத்தை மீண்டும் துவக்க உள்ளது. கொரோனா பரவலுக்கு முன்பு இருந்த கட்டணமே தொடரும் எனவும், முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும் எனவும் இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மலை இரயில் போக்குவரத்து 6 ம் தேதி துவக்கம் – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

மலை இரயிலில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கப்படும் எனவும், பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீலகிரி மலை இரயில் போக்குவரத்து மீண்டும் துவக்கப்படுவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மலை இரயில் போக்குவரத்து 6 ம் தேதி துவக்கம் – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

மேட்டுப்பாளையத்தில் இருந்து 108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் ஆகியவற்றை மலை இரயில் கடந்து ஊட்டி இரயில் நிலையத்தை சென்றடையும். மலைப் பாம்பை போல வளைந்து நெளிந்து மெல்ல இரயில் மலையேறும். மேகங்கள் தவழும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகும், இயற்கை சூழலும் மனதை கொள்ளை கொள்ளும். குகைகளுக்குள் ரயில் புகுந்து செல்வது திரில்லான அனுபவமாக இருக்கும். மலைகள், அடர்ந்த காடுகள் இடையே ஆங்காங்கே நீர் வீழ்ச்சிகளை காண முடியும். அதிர்ஷ்டம் இருந்தால் வனவிலங்குகள் நடமாட்டத்தை பார்க்கலாம். இதனால் மலை இரயில் பயணம் என்பது ஊட்டியை வேறொரு கோணத்தில் பார்க்க வைக்கும். இதன் காரணமாக உதகைக்கு நீலகிரி மலை இரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க : ’மச்சி ஒரு டிரிப் போலமா?’ பார்ட்-3: ‛நீலவானம்... நீயும். நானும்..’ நீலகிரி மலை இரயில் பயணம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!

திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?

திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!

“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?

Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்

மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?

School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!

Embed widget