மேலும் அறிய

கோவை டாஸ்மாக் நேரம் குறைப்பு ; இன்று முதல் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

கோவையில் கடந்த சில நாட்களாக தினசரி தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. நாள் ஓன்றுக்கு 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வந்தது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக  தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தினசரி தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. நாள் ஓன்றுக்கு 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நேற்று முதல் கோவையில் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி, டவுன்ஹால், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகம் இன்று முதல் அமல்படுத்தியுள்ளது. பால், மருந்து, காய்கறிகள் ஆகிய அத்தியாவசிய கடைகள் மட்டுமே காலை 6 மணியிலிருந்து செயல்படவும், பிற கடைகள் அனைத்தும் 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மளிகை கடைகளையும் அத்தியாவசியமான கடைகள் பட்டியலில் சேர்க்கவும், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை கடைகள் செயல்படவும் அனுமதிக்க வேண்டும் என மளிகை கடை உரிமையாளர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரனை வியாபாரிகள் சங்கத்தினர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.  இது தொடர்பாக வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆலோசனை நடத்திய  பின்னர்  புதிய  கட்டுப்பாடுகளும், சில தளர்வுகளும்  விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

புதிய கட்டுப்பாடுகள்

கோவை டாஸ்மாக் நேரம் குறைப்பு ; இன்று முதல் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

அதன்படி கோவை மாவட்டத்தில் அனைத்து மளிகை கடைகள், பேக்கரிகள், காய்கறி கடைகள், டீ கடைகள்  இனி காலை 6 மணி முதல் 5 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மீன் மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் செயல்படவும், டாஸ்மாக் மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவையில் உள்ள அனைத்து  மால்களும் ஞாயிற்றுக்கிழமை செயல்பட அனுமதி இல்லை எனவும், பொள்ளாச்சி மாட்டு சந்தை இன்று முதல் இயங்க மாவட்ட நிர்வாகம் சார்பில்  தடை விதித்தும் மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்திரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் அருங்காட்சியங்கள் செயல்பட தடை விதித்தும் , கோவை மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைகள் இன்று காலை முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்றது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மீண்டும் போர் தொடங்க வாய்ப்பிருக்கா? முதுகில் குத்திய பாகிஸ்தான் ராணுவம்.. கார்கில் சொல்லும் பாடம்
கூட இருந்தே குழி பறிக்கிறதா பாகிஸ்தான் ராணுவம்? அவங்களை ஏன் நம்ப முடியாது.. கார்கில் சொன்ன பாடம்
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கதறி அழுத முரளி நாயக் தந்தை“அழாதீங்க அப்பா நான் இருக்கேன்” கட்டி பிடித்து ஆறுதல் சொன்ன பவன் Murali Naik Funeralஓய்வை அறிவித்த விராட் கோலி?ஷாக்கான ரசிகர்கள், BCCI! திடீர் முடிவுக்கு காரணம் என்ன? | Virat Kohli Retirementகடன்கார பாகிஸ்தானுக்கு 1 B நிதி இந்தியா பேச்சை கேட்காத IMF மோடியின் அடுத்த மூவ்? IMF Loan to Pakistan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் போர் தொடங்க வாய்ப்பிருக்கா? முதுகில் குத்திய பாகிஸ்தான் ராணுவம்.. கார்கில் சொல்லும் பாடம்
கூட இருந்தே குழி பறிக்கிறதா பாகிஸ்தான் ராணுவம்? அவங்களை ஏன் நம்ப முடியாது.. கார்கில் சொன்ன பாடம்
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
சித்திரை முழு நிலவு மாநாடு - பிரமாண்ட மேடை, குவியும் கூட்டம் - போக்குவரத்து மாற்றம், போகக்கூடாத வழிகள்
சித்திரை முழு நிலவு மாநாடு - பிரமாண்ட மேடை, குவியும் கூட்டம் - போக்குவரத்து மாற்றம், போகக்கூடாத வழிகள்
11 ஆண்டுகள் - மரக்காணம் வன்முறை, மறக்க முடியாத வன்னியர் சங்க விழா - கொலையில் முடிந்த மாநாடு
11 ஆண்டுகள் - மரக்காணம் வன்முறை, மறக்க முடியாத வன்னியர் சங்க விழா - கொலையில் முடிந்த மாநாடு
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள்,  ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள், ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
Embed widget