மேலும் அறிய

Kanimozhi MP: "தி.மு.க.விற்குத்தான் வெற்றி! கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி" - கனிமொழி எம்.பி. நம்பிக்கை

கோவை திமுக வேட்பாளர் நிச்சயமாக வெற்றி பெறுவார். கோவையில் இரண்டாவது இடத்திற்கு போட்டி இருக்கும் என்பது தெரிகின்றது என்று கனிமொழி பரப்புரையில் பேசியுள்ளார்.

கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, துடியலூர், சிங்காநல்லூர், சூலூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் கோவை அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

இரண்டாவது இடத்திற்கு போட்டி:

அப்போது பேசிய அவர், கோவையில் கணபதி ராஜ்குமாருக்கு பிரச்சாரம் செய்துள்ளேன். கோவை திமுக வேட்பாளர் நிச்சயமாக வெற்றி பெறுவார். கோவையில் இரண்டாவது இடத்திற்கு போட்டி இருக்கும் என்பது தெரிகின்றது. திமுக ஆட்சியின் திட்டங்கள் மக்களை சென்றைடைந்து இருக்கின்றது. மக்கள் தெளிவாக திமுக கூட்டணி இருக்கும் கட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். பா.ஜ.க எந்த பொறுப்பிற்கும் வந்து விடக்கூடாது என தெளிவாக இருக்கின்றனர். 40 இடங்களிலும் கூட்டணி வெற்றி பெறும்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தமிழகத்தில் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் உரிமைதொகை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினை போல் ஒரே பயனாளிக்கு பல எண்கள் கொடுத்த திட்டம் போல திமுக திட்டங்கள் கிடையாது. திமுகவின் திட்டங்கள் மக்களை சென்றடைந்து இருக்கிறது. காலை உணவு திட்டம் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது. திட்டங்கள் பெயரளவில் இருக்கிறது என்பது சொல்வதை ஏற்க முடியாது.

போதைப்பொருள் விவகாரம்:

போதைப்பொருள் விவகாரத்தை பொறுத்த வரை, அந்த துறையே அவர்களிடம் தான் இருக்கிறது. மத்திய அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். மாநில அரசு அதற்கு உதவ தயாராக உள்ளது. குஜராத்தில் பல லட்சம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த துறைமுகம் யாருடையது என்று அனைவருக்கும் தெரியும். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அந்த விசாரணையே மூடிவிட்டார்களா என்பதும் தெரியவில்லை. மத்திய அரசின் நடவடிக்கைக்கு உதவுவதற்கு நிச்சயமாக தமிழக அரசு தயாராக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

கனவு காண்பது உரிமை:

கோவையில் 60 சதவீத வாக்குகளை பெறுவேன் என அண்ணாமலை சொல்லி இருப்பது குறித்த கேள்விக்கு, “கனவு காண்பது அவர்களுடைய உரிமை. ஆனால் வெற்றி நிச்சயமாக திமுகவிற்கே. ஒரு பைசா செலவழிக்க மாட்டார்கள் என்றால், எதற்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் அவ்வளவு பணம் வாங்கினார்கள்? யாரும் இங்கு காசைக் கொட்டி வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. முதல்வரின்  திட்டங்களை நம்பித்தான் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்” எனப் பதிலளித்தார்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Embed widget