மேலும் அறிய

Minister E. V. Velu: ’திமுக அரசு கோவைக்கு எந்தவித ஓர வஞ்சனையும் செய்யவில்லை’.. அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்!

கோவையை திமுக அரசு புறக்கணிக்கவில்லை, தொழில் நகரமான கோவைக்கு எந்தவித ஓர வஞ்சனையும் செய்யவில்லை என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

கோவை மதுக்கரை மைல்கல் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதி வரை 32 கிலோமீட்டர் தூரத்திற்கு மேற்கு புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான துவக்க விழாவில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பின்னர் கோவைக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறை மூலமாக 368 கிலோமீட்டர் சாலை தூரத்தை 770 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக 284 கோடி மதிப்பில் 14 பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவையில் சுற்றுவட்ட சாலை அறவிப்பை 2007 ல் கலைஞர் முதலமைச்சராக இருக்கும் போது வெளியிட்டார். 2009 ல் திட்டம் இறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆட்சி மாற்றத்தால் இந்த திட்டம் தொய்வடைத்தது. இங்குள்ள பெரும்பான்மையான தொழிலதிபர்களை அழைத்து கூட்டம் நடத்தியபோது, இந்த மேற்கு புறவழிச்சாலை பணியை முதன்மையாக செய்ய சொன்னார்கள். அதன் அடிப்படையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கோவை மக்களின் நீண்ட கால கோரிக்கையின் பேரில் மேற்கு புறவழிச்சாலை பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கேரளாவில் இருந்து வரும் பெரும்பான்மையானவர்கள் மாநகருக்குள் வராமல் நீலகிரிக்கு செல்ல முடியும். இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும்.

Minister E. V. Velu: ’திமுக அரசு கோவைக்கு எந்தவித ஓர வஞ்சனையும் செய்யவில்லை’.. அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்!

இந்த புறவழிச்சாலை பணிகள் 3 கட்டமாக செய்ய இருக்கின்றோம். முதற்கட்டமாக மதுக்கரை-மாதம்பட்டி வரையிலான சாலை பணிக்கு முழுமையாக நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளதால், 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இன்று பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று இருக்கும் போதே 2 ஆம் கட்ட பணிகளுக்கு 95% நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. மூன்றாம் கட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 24 மாதங்களில் இப்பணிகள் முடிக்கப்படும். இந்தியா குறித்து பேசிய விவகாரம் தொடர்பாக அறிக்கை கொடுத்து இருக்கின்றேன். சரவணம்பட்டி, சாய்பாபா காலனி, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் கட்ட முடிவு எடுக்கப்பட்ட நிலையில், மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த பகுதிகளில் மேம்பாலம் பணிகள் வேண்டும் என கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்ததால், இந்த  சிங்காநல்லூர், சாய்பாபா காலனி பாலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருகின்றது. தவிர்க்க முடியாத காரணத்தினால், சாலை பணிகளுக்கு விவசாயம் நிலங்கள் ஒரு சில இடங்களில் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

செம்மொழி மாநாடு கோவையில் தான் கலைஞர் நடத்தினார். கோவைக்கு பல்வேறு அறிவிப்புகளை கொடுத்தோம். அதை அதிமுக தான் கிடப்பில் போட்டார்கள். ஆனால் அதிமுக விட்டு சென்ற பாலப்பணிகளை முக்கியத்துவம் கொடுத்து செய்து வருகின்றோம். மேட்டுப்பாளையம் சக்தி சாலை 4 வழி சாலையாக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். கோவையை திமுக அரசு புறக்கணிக்க வில்லை. தொழில் நகரமான கோவைக்கு எந்தவித ஓர வஞ்சனையும் செய்யவில்லை. இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். அவினாசி மேம்பாலம் பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மெட்ரோ பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றது. எல்& டி சாலையில் அவர்களுடைய ஒப்பந்த காலம் முடிந்தவுடன் மாநில அரசு அந்த சாலையை கையைகப்படுத்தி 4 வழி சாலையாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Embed widget