மேலும் அறிய

'இந்தியா கூட்டணி போல் மணமக்கள் ஒற்றுமையாக இருந்து வெற்றி பெற வேண்டும்’ - உதயநிதி ஸ்டாலின்

அதிமுகவில் பல அணிகள் இருக்கின்றது. ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, தீபா அணி, தீபாவின் டிரைவர் அணி, இன்று கூட நான் தான் அதிமுக என்று ஒருவர் கிளம்பியுள்ளார். அதிமுகவின் மற்றொரு அணி உள்ளது. அது பாஜக அணி.

கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வருகை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு, கோவை விமான நிலையத்தில் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  பங்கேற்றார். கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி இல்ல திருமண நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்கள், பிரபாகரன் - இந்துஜா ஆகியோரை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.

இந்தியா கூட்டணி போல் மணமக்கள் ஒற்றுமையாக இருந்து வெற்றி பெற வேண்டும்’ - உதயநிதி ஸ்டாலின்

அப்போது அவர் பேசுகையில், “ஒட்டுமொத்த தமிழக மகளிர் அனைவரும் தற்போது முதலமைச்சரை வாழ்த்தி வருகின்றனர் அது உங்களுக்கும் தெரியும். ஆயிரம் ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் மகளிர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நூறு வருடத்துக்கு முன்பாக பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாது. அதை உடைத்து தற்போது மாற்றம் செய்தது தான் திராவிட மாடல் ஆட்சி. ஆட்சி அமைந்தும் முதல் கையெழுத்து மகளிருக்கு கட்டணம் இல்லாமல் பேருந்தில் செல்ல அனுமதி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழாவுக்கு முன்பாகவே மகளிருக்கு ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது. இதனால் அனைத்து பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிமுகவில் பல அணிகள் இருக்கின்றது. ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, தீபா அணி, தீபாவின் டிரைவர் அணி, இன்று கூட நான் தான் அதிமுக என்று ஒருவர் கிளம்பியுள்ளார். அதிமுகவின் மற்றொறு அணி உள்ளது. அது பாஜக அணி. நமது இந்தியா கூட்டணி போல வெற்றி கூட்டணியாக மணமக்கள் ஒற்றுமையாக இருந்து வெற்றி பெற வேண்டும்” எனத் தெரிவித்தார். இந்த திருமண வரவேற்பு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு குழந்தைக்கு உதயசூரியன் என பெயர் சூட்டினார். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி, அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி, முத்துசாமி, சிவசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Embed widget