மேலும் அறிய

’பாஜகவின் தோல்வி பிற மாநிலங்களிலும் தொடரும்’ - அமைச்சர் சாமிநாதன் பேட்டி

”கர்நாடகாவில் பாஜகவின் தோல்வி என்பது தென் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு. இது வட மாநிலங்களில் அடுத்தடுத்து ஏற்படும். பாஜக மதரீதியான மூளை சலவையை செய்து மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது”

கோவை சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். பின்னர் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் சாமிநாதன்,  ”முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் சொல்லிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். மக்களுக்கான திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். கர்நாடகாவில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தான். அதை காங்கிரஸ்சும், பாஜகவும் போட்டி போட்டுக் கொண்டு அறிவித்தனர். இன்று காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகிறது. மற்ற மாநிலத்திற்கும் வழி காட்டும் அரசாக திமுக உள்ளது.

ஆட்சி பொறுப்பு ஏற்ற முதல் நாளில் கொரோனா நிதி உதவி, மகளிருக்கு பேருந்து பயணம், உள்ளிட்ட முக்கிய திட்டங்களை முதல் கையெழுத்தாக போட்டார் முதல்வர். கொரோனா நோய்த்தொற்று பாதித்தவர்களை மருத்துவமனைக்குள் நேரில் சென்று ஆய்வு செய்தவர் முதல்வர். கொரோனாவை கட்டுப்படுத்த ஆட்சி பொறுப்பு ஏற்று 7 மாதங்கள் போராடினோம். கொரோனாவிலிருந்து சகஜ வாழ்க்கைக்கு காரணத்திற்கு முதல்வரின் நடவடிக்கை தான் காரணம்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். மக்களை தேடி மருந்துகளை கொண்டு கொடுத்து வருகின்றனர். நம்மை காப்போம் 48 மணி நேரம். உதவி செய்பவர்களுக்கு 5 ஆயிரம் உதவி செய்கிறது. 48 மணி நேரத்திற்குள் சிகிச்சைக்கு சேர்க்கை வந்தால் அரசு ஏற்கிறது. புதுமை பெண் திட்டம், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு 1000 கொடுக்கப்பட்டு வருகிறது. படிப்பவர்களின் திறமைகளை மேம்படுத்த அரசு உதவுகிறது. தொலை நோக்கு திட்டங்களை முதல்வர் வகுத்து வருகிறார். கடந்த திமுக ஆட்சி காலத்தில் அவினாசி சாலை, பெரியநாய்கன்பாளையம் உள்ளிட்ட சாலைகள் அகலப்படுத்தப்பட்டது. திமுக ஆட்சியில் திட்டமிட்ட காந்திபுரம் மேம்பாலம் அதிமுக ஆட்சியில் குறைபாடுடன் கட்டப்பட்டது” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “திமுகவின் திட்டங்கள் தான் கர்நாடக தேர்தலில் எதிரொலித்ததது. பாஜகவை காட்டிலும் காங்கிரஸ் அழுத்தமாக திட்டங்களை எடுத்துரைத்ததின் அடிப்படையில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவில் பாஜகவின் தோல்வி என்பது தென் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு. இது வட மாநிலங்களில் அடுத்தடுத்து ஏற்படும். பாஜக மதரீதியாக மூளை சலவையை செய்து மக்கள் மத்தியில் அரசியல் செய்து வருகிறது. அதிலிருந்து கர்நாடக மக்களுக்கு தெளிவு ஏற்பட்டதால் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இது பிற மாநிலங்களில் தொடரும். பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரிய அட்டைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அவை படிப்படியாக வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget