மேலும் அறிய

‘குடிகாரர்கள் என்று சொல்வதை பொறுத்து கொள்ள முடியாது’ - அமைச்சர் முத்துசாமி ஆதங்கம்

அமலாக்கத்துறை சோதனை திட்டமிட்டு செய்யப்படுகிறது. இதனால் யாரும் தொய்வடைந்து விட போவதில்லை. அமைச்சர் பொன்முடியிடம் தவறு இருக்க முடியாது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

கோவை ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் முத்துசாமி மிதிவண்டிகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி, “தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு அன்றாடம் பயன்படும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் 260 கோடி ரூபாய் மதிப்பில் 567 கி.மீ.க்கு சாலைகள் அமைக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 7 ஆயிரம் சைக்கிள் தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கும் மிக விரைவில் சைக்கிள் வழங்கப்படும். மாணவர்கள் சைக்கிளை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். பள்ளிக்கு வரும்போது போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்ய முகாந்திரம் இல்லை. இந்த சோதனை திட்டமிட்டு செய்யப்படுகிறது. இதனால் யாரும் தொய்வடைந்து விட போவதில்லை. அமைச்சர் பொன்முடியிடம் தவறு இருக்க முடியாது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இதில் இருந்து அவர் மிக விரைவில் மீண்டு வருவார். அமலாக்கத்துறை சோதனைகளால் பயத்தை ஏற்படுத்தி விட முடியாது. எங்களது கவனத்தை திருப்ப முடியாது. பெங்களூரில் முதலமைச்சர் கலந்து கொள்ளும் எதிர்கட்சி கூட்டம் சிறப்பாக நடக்கும்.‘குடிகாரர்கள் என்று சொல்வதை பொறுத்து கொள்ள முடியாது’ - அமைச்சர் முத்துசாமி ஆதங்கம்

கோவை மத்திய சிறைச்சாலை இடம் மாற்றம் செய்யப்பட்டு, அங்கு செம்மொழி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளை காலை 7 மணிக்கு திறப்போம் என ஒரு இடத்தில் கூட நாங்கள் எதுவும் சொல்லவில்லை. டாஸ்மாக் தொழிலாளர்கள் பிரச்சனையை தீர்ந்தால் தான் நிம்மதியாக வேலை செய்ய முடியும். தொழிலாளர்கள் பிரச்சனைகளை தீர்க்க 18 தொழிற்சங்கங்களிடம் இருந்து வாங்கிய மனுக்களை ஆய்வு செய்து, உடனடியாக தீர்க்கும் பிரச்சனைகள் குறித்து தொழிற்சங்கங்கள் உடன் ஒப்பந்தம் போட தயாராக உள்ளோம். மது பாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலிக்க கூடாது எனத் திட்டவட்டமாக சொல்லியுள்ளோம்.

தொழிலாளி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே முதல் இலக்கு. மது பாட்டில்களால் பல்வேறு பிரச்சனைகள் வருவதால்,  டெட்ரா பேக் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்கிறோம் என்று தான் சொன்னோம். ஆலோசணைகளை அன்பாக சொன்னால் கேட்டுக்கொள்வோம். அதற்கு ஏன் திட்டுகிறார்கள்? நான் இரண்டு நிமிடம் பேசியதை அரை நிமிடம் எடுத்தால் தவறாக தான் வரும். மதுபாட்டில்கள் சேதமடைவது, கலப்படம் செய்ய வாய்ப்பிருக்கிறது என சொல்லப்படுகிறது. அதனால் டெட்ரா பேக் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்து, கருத்துகள் கேட்டே கொண்டு வரப்படும்.

டெட்ரா பேக், 90 மி.லி. மது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவை வந்தாலும் வரலாம். வரமாலும் போகலாம். காலையில் குடிப்பவர்கள் குடிகாரர்கள் என்று சொல்வதை பொறுத்து கொள்ள முடியாது. கடுமையான வேலை செய்பவர்கள் தவிர்க்க முடியாமல் மது அருந்துகிறார்கள். இதனைத் தவிர்க்க மாற்று வழி ஆலோசனைகளை சொல்லுங்கள். டாஸ்மாக் மூலம் பெரிய வருமானம் ஈட்ட வேண்டுமென்ற எண்ணம் இல்லை. சட்ட விரோதமாக மது வாங்கி தவறு நடக்க கூடாது. மதுக்கடையில் காத்திருப்பதை தவிர்க்க 90 மி.லி. மது கொண்டு வர ஆய்வு செய்யப்படுகிறது. மது குடிப்பவர்களை படிப்படியாக நமது பக்கம் கொண்டு வர வேண்டும். எந்த திட்டத்தையும் யாரையும் பாதிக்காத வகையில் செய்வோம். சிறிய நூற்பாலைகள் வேலை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அதன் முடிவு விரைவில் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget