மேலும் அறிய

தமிழ்நாடு தொழில் துறையில் சிறந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது - அமைச்சர் தா.மோ. அன்பரசன்

கோவையில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை கொடிசியா அரங்கில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விழாவை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் துவக்கி வைத்தார். பின்னர் இந்நிகழ்வில் பேசிய அவர், இந்த ஸ்டார்ட் அப் திருவிழா அனைத்து மண்டலங்களிலும் நடத்தப்படும். புதிய கண்டுபிடிப்புகள் தான் உலகை ஆள்கின்றன. புதிய படைப்புகள் உருவாக்குவதில் கடைசி இடத்தில் இருந்து, 3 ஆவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறி உள்ளது. இந்த 2 ஆண்டுகளில் மட்டும் 8 லட்சத்து 98 ஆயிரம் பேருக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்ட் அப்களை நிறுவனங்களாக்க முன்னேற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 28 சிறு கிளஸ்டர்களுக்கு இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சமச்சீர் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என முதல்வர் நினைக்கிறார். தமிழ்நாட்டில் புதிய ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களை உருவாக்க அரசு நிதி வழங்கி வருகிறது. தொழில் உரிமை பெறுவதற்கான சிக்கலை குறைத்துள்ளோம். கோவையில் நான்கு தொழிற்போட்டைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது” என்றார்.

இதைத்தொடர்ந்து தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா பேசும் போது, “இந்தியாவே வியந்து பார்க்கும் வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பதிவு 3 மடங்கு அதிகரித்து உள்ளது. தமிழ்நாடு பல்வேறு துறைகளிலும் முதலிடத்தில் இருக்க கோவை முக்கிய பங்கு வகிக்கிறது. மின்சார இரு சக்கர வாகன விற்பனையில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி தமிழ்நாடு பயணம் செய்கிறது” எனத் தெரிவித்தார்.


தமிழ்நாடு தொழில் துறையில் சிறந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது - அமைச்சர் தா.மோ. அன்பரசன்

இந்த விழாவில், காணொலி வாயிலாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்படுத்தியவர் கலைஞர். கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்பதால், இந்த நிகழ்வை அங்கே நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டேன். அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை நோக்கி பல்வேறு செயல் திட்டங்கள் செயல்படுத்ப்தபடுகின்றது. 2300 ஸ்டார்ட் அப் தொழில் நிறுவனங்கள் மட்டும் பதிவு செய்து இருந்த நிலையில், திமுக ஆட்சியில் மூன்று மடங்கு உயர்ந்து 6800 ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக மாறியுள்ளது. தமிழகத்தை புத்தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற மாநிலமாக மாற்றுவோம்” எனக் கூறினார்.

பின்னர் பேட்டியளித்த த.மோ.அன்பரசன், “திறமையான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 10 லட்சம் நிதி வழங்கி உள்ளோம். வருகின்ற காலங்களில் இது அதிகரிக்கும். தொழில் துறையில் தமிழ்நாடு சிறந்து வழங்க இதுபோன்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு பயிற்சிகள் அளிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். புதிய தொழில் முனைவர்களை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்வோம். பாதிக்கப்பட்ட தொழில் முனைவர்களுக்கு உரிய உதவி செய்யப்படும்” என்றார். இதையடுத்து பேசிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, “முதல்வர் மனதில் கோவைக்கு சிறப்பு இடம் உள்ளது. கோவைக்கு நிறைய திட்டங்கள் வரவுள்ளது. அதை முதல்வர் விரைவில் அறிவிக்கவுள்ளார். பல்வேறு ஐ.டி நிறுவனங்களை கோவைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விமான நிலையம் விரிவாக்கம் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. மிகப்பெரிய நிறுவங்கள் தமிழ்நாடு நோக்கி வரவுள்ளது. கோவையில் தொழில் நிறுவனங்கள் வருவதற்கு நிலம் பிரச்சனை உள்ளது. அதையும் சரி செய்து கொண்டு வருவதற்கான பணிகள் செய்யப்பட்டு வருகிறது” என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget