எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்கள் மாநாடு ; பார்வையாளர்களை கவர்ந்த லேசர் ஷோ நிகழ்ச்சி
எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்கள் சார்பில் ட்ரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் 2023 என்ற நிகழ்ச்சி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.
![எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்கள் மாநாடு ; பார்வையாளர்களை கவர்ந்த லேசர் ஷோ நிகழ்ச்சி Laser show enthralls audience at ssvm Educational Institutions Conference in coimbatore TNN எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்கள் மாநாடு ; பார்வையாளர்களை கவர்ந்த லேசர் ஷோ நிகழ்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/03/3be682a9ca702aa4a13e7f0c52226ad21693742175673188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவையில் எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடந்த டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் நிகழ்ச்சியில் மாணவர் முயற்சியாளர் விருது வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் பட்டணம் பகுதியில் எஸ்.எஸ்.வி.எம். என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்கள் சார்பில் ட்ரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் 2023 என்ற நிகழ்ச்சி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. தென்னிந்திய ராணுவ தளபதி லெப்டினேண்ட் ஜெனரல் அஜய் குமார் சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இந்த மாநாட்டினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு துறைகளில் இருந்து ஏண்டர் பிரனர், டிஜிட்டல் கிரியேட்டர், கல்வியாளர்கள் என பல்வேறு துறைகளில் இருந்து வல்லுநர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் உடன் கலந்துரையாடினர். இதனை தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு மேலாக நடந்த லேசர் சோ நிகழ்ச்சி கண்களை கவரும் வகையில் இருந்ததோடு, கண்களுக்கு விருந்து வைத்தது.
இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் பரிசுகளையும் வழங்கினார். தொடர்ந்து முதலும் நீ முடிவும் நீ திரைப்படத்தில் நடித்த நடிகர் கிஷன் தாஸ் மாணவர்களுடன் சமூக வலைதளங்கள் பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொண்டார். மாணவர்களின் கேள்வி கேட்கும் திறன்கள் அவர்களின் திறமையை வெளிப்படையச் செய்கின்றது என்றும், கேள்வி திறனை பார்க்கும் போது மாணவர்கள் அனைவரும் இந்தத் துறை தான் என இல்லாமல் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள் என்று எண்ணச் செய்கின்றது எனவும் கூறினார். மேலும் இந்த ஆண்டுக்கான சவால்கள் மற்றும் சமூக மேம்பாடு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் புதுமையான வணிக யோசனைகள் மற்றும் மாதிரிகளை உருவாக்குவதை குறிப்பிடத்தக்க சமர்ப்பிப்புகளில் 15 விதிவிலக்கான மற்றும் புதுமையான அங்கீகாரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. இளம் மாணவர்களின் அற்புதமான திறமைகள் மற்றும் படைப்பாற்றல் அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும் மாணவர்களின் வயதை மற்றும் பின்னணி படுத்தாமல் அவர்களை முக்கியமான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)